Last Updated:
1984 ஆம் ஆண்டு அன்றைய பிரதமர் இந்திரா காந்தி எடுத்த ஆப்ரேஷன் ப்ளூ ஸ்டார் நடவடிக்கை தவறானது என ப. சிதம்பரம் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னாள் பிரதமர் மறைந்த இந்திரா காந்தி, ஆப்ரேஷன் ப்ளூ ஸ்டார் நடவடிக்கை எடுத்தது தவறான முடிவு. அது இந்திரா காந்தியின் உயிரையே விலையாக கொடுக்கவைத்தது என முன்னாள் அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப. சிதம்பரம் தெரிவித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இமாச்சல் பிரதேசம் மாநிலம் கசோலில் நடந்த ஒரு இலக்கிய நிகழ்ச்சியில் பேசிய முன்னாள் அமைச்சர் ப. சிதம்பரம், “ஆபரேஷன் ப்ளூ ஸ்டாரை இந்திரா காந்தி தேர்வு செய்தது தவறான வழி. பொற்கோயிலை மீட்டதற்கு ஆபரேஷன் பிளாக் தண்டர் தான் சரியான நடவடிக்கை.
ஆப்ரேசன் ப்ளூ ஸ்டார் நடவடிக்கைக்காக இந்திரா காந்தியை மட்டும் குற்றம்சாட்ட இயலாது. ராணுவம், போலீசார், உளவுத்துறை, அதிகாரிகள் என அனைவரும் சேர்ந்து எடுத்த முடிவு அது. எனவே இந்திரா காந்தியைப் பற்றி மட்டும் நாம் பேச முடியுமா?” என கேள்வி எழுப்பினார். இவரின் இந்தப் பேச்சு தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதன்பிறகு இந்திரா காந்தியின் மெய்க்காப்பாளர்களாக இருந்த பியாந்த் சிங் மற்றும் சத்வந்த் சிங் ஆகியோர் அக்டோபர் 31, 1984 அன்று அவரது இல்லத்தில் அவரைக் கொன்றனர். இது ஆப்ரேஷன் ப்ளூ ஸ்டாரின் எதிர்வினையாக பார்க்கப்பட்டது.
இந்நிலையில், பொற்கோயிலை மீட்க ஆபரேஷன் ப்ளூ ஸ்டாரை இந்திரா காந்தி தேர்வு செய்தது தவறான வழி என்று காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
October 12, 2025 3:15 PM IST
”இந்திரா காந்தி எடுத்த நடவடிக்கை தவறானது…” – 1984 நிகழ்வு குறித்து ப. சிதம்பரம் கருத்தால் பரபரப்பு

