அதிமுக தொண்டனின் வரலாறு
அதிமுக தொண்டர்கள் மற்ற கட்சியின் கொடியை தூக்கியதாக வரலாறு உள்ளதா? எங்கள் கட்சி கூட்டங்களில் கூட்டணி கட்சி கொடிகள் அதிகம் பிடிக்கப்படுவதைப் பார்த்து, ‘நம்ம கட்சியினர் நம்ம கொடியை பிடிக்க மாட்டேங்கிறாங்க’ என்று ஜெயலலிதாவே கேட்டுள்ளார்.
கூட்டணி சேர்ந்தால் தோள் கொடுப்போம், தோளில் தூக்கி கொண்டாடுவோம். எதிர்த்தால் தூக்கி போட்டு மிதித்து விடுவோம். இது அதிமுக தொண்டனின் வரலாறு.
எங்கள் பொதுச் செயலாளர் யாரை சாமி என்று சொல்கிறாரோ அவரை நாங்கள் வணங்குவோம்.

விசிக – திருமாவளவன்
வி.சி.க வன்முறை இயக்கத்தோடு சேர்ந்துவிட்டது, அக்கட்சித் தொண்டர்கள் அந்த வேகத்தைக் காட்டுகிறார்கள்.
விஜய் கட்சியில் கட்டுக்கோப்பு வேண்டும் என்று சொல்லும் திருமாவளவன், தன்னுடைய கட்சித் தொண்டர்களையும், நிர்வாகிகளையும் கண்டிக்க வேண்டும்.
சேர்ந்த இடம் அப்படி, திமுக எப்படியோ அப்படித்தான் விசிகவும் இருக்கும். தலைவர் எம்ஜிஆர் என்றால் ஒரு கெத்து, அவருக்கு இணை யாரும் கிடையாது. சினிமாவிலும் அரசியலிலும் கொடி நாட்டிய எம்ஜிஆரோடு யாரையும் ஒப்பிட மாட்டோம், எந்தத் தலைவரையும் ஒப்பிட மாட்டோம்” என்றார்.
