Last Updated:
கர்ப்பிணிப் பெண் ஒருவரை மருத்துவமனை ஊழியர் அட்மிஷன் செய்து கொள்ள மறுத்ததன் காரணமாக மருத்துவமனையின் தரையிலேயே குழந்தையை பிரசவித்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மருத்துவ கவனக்குறைவு காரணமாக உத்தராகண்ட் மாநிலத்தில் ஒரு கர்ப்பிணிப் பெண்ணை மருத்துவமனை ஊழியர் அட்மிஷன் செய்து கொள்ள மறுத்ததன் காரணமாக மருத்துவமனையின் தரையிலேயே குழந்தையை பிரசவித்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவமானது ஹரித்துவாரில் உள்ள ஒரு மருத்துவமனையில் நடைபெற்றுள்ளது.
பாதிக்கப்பட்ட அந்தப் பெண் ஒரு ஏழை குடும்பத்தைச் சேர்ந்தவர். அவர் இரவு 9:30 மணி அளவில் மருத்துவமனைக்குச் சென்று இருக்கிறார். அவருடைய குடும்பத்தார் கூறும் தகவல்களின் அடிப்படையில், அந்த சமயத்தில் அங்கு இருந்த டியூட்டி டாக்டர் அங்கு பிரசவம் பார்ப்பதில்லை என்று கூறி அந்தப் பெண்ணை அட்மிட் செய்வதற்கோ அல்லது அவருக்கு சிகிச்சை அளிப்பதற்கோ மறுத்திருக்கிறார்.
வலியில் துடித்த அந்தப் பெண் மருத்துவமனையின் அவசரகால அறையின் தரையிலேயே அதிகாலை 1:30 மணி அளவில் எந்த ஒரு மருத்துவ உதவியும் இல்லாமல் குழந்தையை பிரசவித்து இருக்கிறார். வைரலாகும் அந்த வீடியோவில் அந்தப் பெண் வலியில் துடித்தவாறு, தரையில் படுத்து இருப்பதைப் பார்க்க முடிகிறது. அந்தப் பெண்ணை வயதான ஒரு உறவினர் பிடித்துக் கொண்டு அமர்ந்திருக்கிறார். அந்தப் பெண்ணுடன் மருத்துவமனையைச் சேர்ந்த ஊழியர்கள் யாரும் கிடையாது.
பத்திரிகையாளர்களிடம் பேசும்போது, அந்தப் பெண்ணின் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு நபர் அந்தப் பெண்ணை பெட்டில் கூட படுக்கக்கூடாது என்று கூறியதாக சொல்கிறார். மேலும் குழந்தையைப் பிரசவித்த பிறகு அந்த மருத்துவமனையின் செவிலியர் ஒருவர் அதிர்ச்சியூட்டும் விதமாக அந்தப் பெண்ணை கேலி செய்யும் போக்கில் கமென்ட் செய்திருக்கிறார்.
A disturbing incident in Haridwar:
A pregnant woman delivered her baby on the hospital floor after being reportedly denied admission.
Despite intervention attempts by her family and an ASHA worker, hospital staff did not respond.
This raises serious concerns about healthcare… pic.twitter.com/7rQu2fFm4Z
— Suraj G Naik (@yoursurajnaik) October 1, 2025
“இந்த அனுபவம் சிறப்பாக இருந்ததா? உனக்கு இன்னும் நிறைய குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டுமா?” என்று இரண்டு செவிலியர்கள் அந்தப் பெண்ணின் அருகில் நின்று பேசிக் கொண்டிருந்ததாக கூறுகிறார்.
அதே சமயத்தில் அந்த மருத்துவமனையின் தலைமை மருத்துவ அதிகாரியான டாக்டர் ஆர்.கே.சிங் அவர்கள், இது சம்பந்தமாக முதற்கட்ட அறிக்கை உறுதி செய்யப்பட்டதாகவும், அந்த வீடியோவின் உண்மைத்தன்மை சரிபார்க்கப்பட்டதாகவும் கூறியுள்ளார். கவனக்குறைவு உறுதி செய்யப்பட்டு, அதனைத் தொடர்ந்து தீவிரமான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதையும் கூறியிருக்கிறார்.
October 09, 2025 2:42 PM IST
மருத்துவர்களின் அலட்சியப்போக்கால் மருத்துவமனையில் தரையிலேயே குழந்தையை பிரசவித்த பெண்…! வைரல் பதிவு…

