Thursday, November 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

Bihar Election | சிறு கட்சிகள் திடீர் போர்க்கொடி.. பிகார் தேர்தலில் NDA கூட்டணிக்கு புதிய சிக்கல் | இந்தியா

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 9, 2025
in அரசியல் செய்திகள்
0
Bihar Election | சிறு கட்சிகள் திடீர் போர்க்கொடி.. பிகார் தேர்தலில் NDA கூட்டணிக்கு புதிய சிக்கல் | இந்தியா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:October 09, 2025 7:34 AM IST

பிகாரில் தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சிறு கட்சிகள் போர்க்கொடி தூக்கியிருப்பது தொகுப் பங்கீட்டில் இழுபறியை ஏற்படுத்தி உள்ளது.

 பிகார் தேர்தலில் NDA கூட்டணிக்கு சிக்கல் பிகார் தேர்தலில் NDA கூட்டணிக்கு சிக்கல்
பிகார் தேர்தலில் NDA கூட்டணிக்கு சிக்கல்

பிகாரில் 18-வது சட்டசபை தேர்தல் வருகிற நவம்பர் மாதம் 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக நடக்கிறது. பா.ஜ.க. மூத்த தலைவர் மற்றும் மத்திய அமைச்சரான கிரிராஜ் சிங் செய்தியாளர்களிடம் பேசும்போது பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில், தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக நிதீஷ் குமார் இருப்பார் என கூறினார். இந்த தேர்தலில் தொகுதி பங்கீட்டில், கூட்டணி கட்சிகளுடன் எந்தவித வேற்றுமையும் இல்லை என்றும் விரைவில் நல்ல முடிவு எட்டப்படும் என்றும் கூறினார்.

கடந்த, 2020-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் பா.ஜ.க., நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகளை உள்ளடக்கிய தேசிய ஜனநாயக கூட்டணி 125 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. எதிர்த்து போட்டியிட்ட ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகளை கொண்ட மகா கூட்டணி 110 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. அடிக்கடி உத்திகளை மாற்றி நிதிஷ்குமார் 20 ஆண்டுகளாக தொடர்ந்து முதல்வராக இருந்து வருகிறார்.

இந்நிலையில், எதிர்வரும் தேர்தலில் முதல்வர் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதாதளம் 107 தொகுதிகளிலும், பா.ஜ.க. 105 தொகுதிகளிலும் போட்டியிடும் என்றும் மீதமுள்ள 31 தொகுதிகளை கூட்டணியில் உள்ள லோக் ஜனசக்தி கட்சி உள்ளிட்ட மற்ற கட்சிகள் பகிர்ந்து கொள்ளும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள சிறிய கட்சிகளான லோக் ஜனசக்தி கட்சி (ராம்விலாஸ் பஸ்வான்), இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா, ராஷ்டிரிய லோக் சமதா உள்ளிட்ட கட்சிகள் தங்களுக்கு உரிய இடம் ஒதுக்கப்படவில்லை என அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளதால், தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தையில் இழுபறி ஏற்பட்டுள்ளது.

லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்) தலைவர் சிராக் பஸ்வான், கடந்த தேர்தலில் கட்சி காட்டிய வாக்கு வலிமைக்கு ஏற்ப தொகுதி அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். சிராக் பஸ்வானுக்கு 25 தொகுதிகள் அளிக்க பாஜக முன்வந்துள்ளதாக கூறப்படும் நிலையில், குறைந்தது 40 தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என அவர் பாஜகவிடம் கோரிக்கை வைத்துள்ளார். இதனிடையே, முகேஷ் சாஹ்னி தலைமையிலான விகாஸ் சில் இன்சான் கட்சி (VIP) தங்களின் வாக்கு சதவீதத்தை பாஜக மதிக்கவில்லை என குற்றம் சாட்டியுள்ளது.

அதே போல், ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா(HAM) கட்சியும் NDA பங்கீட்டில் தமக்கான உரிய இடம் வழங்கப்படவில்லை என்று அதிருப்தி தெரிவித்துள்ளது. இந்நிலையில் ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா கட்சித் தலைவரும், மத்திய அமைச்சருமான ஜிதன் ராம் மாஞ்சி சமூக வலைதளத்தில், தொகுதி ஒதுக்கீடு தொடர்பாக சூசகமாக பதிவிட்ட கவிதை, பிகார் அரசியல் களத்தை மேலும் பரபரப்பாகி உள்ளது. ஜிதன் ராம் மாஞ்சியின் பதிவு தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தொகுதிப் பங்கீடு இழுபறியை உறுதி செய்துள்ளது

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

October 09, 2025 7:34 AM IST



.

Previous Post

அமித் ஷாவிடம் மோடி எச்சரிக்கையாக இருக்க வேண்டும் – மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி | West Bengal CM Mamata Banerjee Slams Amit Shah, Warns Modi to Be Cautious

Next Post

‘திண்டுக்கல்லில் சில பணிகளில் தொய்வு ஏற்பட்டு இருக்கிறது’ – துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
‘திண்டுக்கல்லில் சில பணிகளில் தொய்வு ஏற்பட்டு இருக்கிறது’ – துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

'திண்டுக்கல்லில் சில பணிகளில் தொய்வு ஏற்பட்டு இருக்கிறது' - துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In