Thursday, November 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

ஊடகங்களுக்கு நேரடி மிரட்டல்; புதிய தலைமுறை முடக்கப்பட்ட விவகாரத்தில் திமுக அரசுக்கு சீமான் கண்டனம் | threats to the media; Seeman condemns the DMK government over the issue of the new generation being blocked

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 8, 2025
in அரசியல் செய்திகள்
0
ஊடகங்களுக்கு நேரடி மிரட்டல்; புதிய தலைமுறை முடக்கப்பட்ட விவகாரத்தில் திமுக அரசுக்கு சீமான் கண்டனம் | threats to the media; Seeman condemns the DMK government over the issue of the new generation being blocked
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


தமிழில் முன்னணி செய்தி சேனல்களில் ஒன்றான `புதிய தலைமுறை” சேனல், அரசு கேபிளில் முடக்கம் செய்யப்பட்டிருப்பதாக சேனல் நிர்வாகம் குற்றச்சாட்டு முன்வைத்திருக்கிறது.

இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சித் தலைவர்கள், `ஊடக சுதந்திரத்துக்கு எதிரான செயல்’ எனத் தி.மு.க அரசுக்கெதிராக கண்டனங்கள் தெரிவித்து வருகின்றன.

ஊடக மற்றும் பத்திரிகையாளர் சங்கங்களும் இதுகுறித்து அறிக்கை வெளியிட்டு வருகின்றன.

இருப்பினும், அரசுத் தரப்பிலிருந்து எந்தவொரு விளக்கமும் இதுவரை தெரிவிக்கப்படவில்லை.

புதிய தலைமுறை

புதிய தலைமுறை

இந்த நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தி.மு.க அரசுக்குக் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

தனது எக்ஸ் தளப் பதிவில் சீமான், “தமிழக அரசின் கேபிள் சேவையிலிருந்து புதிய தலைமுறை தொலைக்காட்சியை நீக்கியிருக்கும் தி.மு.க அரசின் செயல் கடும் கண்டனத்திற்குரியது.

அரசுக்கு எதிரான செய்திகளை வெளியிட்டதற்காக ஒரு தொலைக்காட்சியையே இருட்டடிப்பு செய்யும் இப்போக்கு கருத்துரிமைக்கு எதிரான அச்சுறுத்தல்; ஊடகங்களுக்கு விடுக்கப்பட்டிருக்கும் நேரடி மிரட்டல்!

முதல்வர் ஸ்டாலின்

முதல்வர் ஸ்டாலின்

சனநாயகம், கருத்துச் சுதந்திரம் என்றெல்லாம் வாய்கிழியப் பேசிவிட்டு, ஊடகங்கள் மீது ஆதிக்கம் செய்வதும், அடக்குமுறைகளைச் செலுத்துவதும் வெட்கக்கேடானது.

ஊடகத்தின் மீதான ஒடுக்குமுறையைக் கைவிட்டு உடனடியாக தமிழ்நாடு முழுவதும் புதிய தலைமுறை தொலைக்காட்சி தெரியும்படி அரசு கேபிளில் மீண்டும் இணைக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்” என்று திமுக அரசை வலியுறுத்தியிருக்கிறார்.



.

Previous Post

ஆற்றில் தவறிவிழுந்த மகனை காப்பாற்றிய தந்தை பரிதாப பலி… சோகத்தை ஏற்படுத்திய சம்பவத்தின் பின்னணி… | இந்தியா

Next Post

கோல்ட்ரிப் உள்ளிட்ட தரமற்ற இருமல் மருந்துகளுக்கு தடை விதிக்க கோரி மனு! | இந்தியா

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
கோல்ட்ரிப் உள்ளிட்ட தரமற்ற இருமல் மருந்துகளுக்கு தடை விதிக்க கோரி மனு! | இந்தியா

கோல்ட்ரிப் உள்ளிட்ட தரமற்ற இருமல் மருந்துகளுக்கு தடை விதிக்க கோரி மனு! | இந்தியா

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In