Last Updated:
பிகார் தேர்தலில் இந்தியா கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டில் சிக்கல் ஏற்பட்டு, முக்கிய கட்சி அதில் இருந்து வெளியேறும் நிலை ஏற்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிகார் மாநிலத்தில் 2 கட்டங்களாக வரும் நவம்பர் 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்நிலையில், இந்தியா கூட்டணியில் பிகார் மாநிலத்திற்கு தலைமை வகிக்கும் ராஷ்டிரிய ஜனதா தளம் சார்பில் தேஜஸ்வி யாதவ் தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
இந்தியா கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 30 தொகுதிகளைக் கேட்ட நிலையில் தேஜஸ்வி அதை ஏற்கவில்லை எனக் கூறப்படுகிறது. 2020-இல் நடந்த தேர்தலில் இந்தியா கூட்டணியில் 19 தொகுதிகளில் போட்டியிட்ட மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 12 இடங்களில் வெற்றி பெற்றது.
கடந்த தேர்தலில் போட்டியிட்ட அதே எண்ணிக்கையில் தான் இந்த முறையும் தொகுதிகளை ஒதுக்க முடியும் என திட்டவட்டமாக தேஜஸ்வி தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதனால், கம்யூனிஸ்ட் தலைவர்கள் தேஜஸ்வியிடம் வெளிப்படையாகவே அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளதாகவும், 30 தொகுதிகள் அடங்கிய புதிய பட்டியலுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாகவும் கூறப்படுகிறது.
எனினும், ராஷ்டிரிய ஜனதா தளத்தின் கையில் முடிவு இருப்பதாக கூறியுள்ள கம்யூனிஸ்ட் தலைவர்கள், தங்களது கோரிக்கை நிராகரிக்கப்பட்டால் தங்களுக்கு வேறு வாய்ப்புகள் இருப்பதாக கூறியுள்ளதால், பிகாரில் இந்தியா கூட்டணிக்குள் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
October 07, 2025 5:46 PM IST
பிகார் தேர்தல்; இந்தியா கூட்டணியில் இருந்து வெளியேறும் முக்கிய கட்சி? தொகுதிப் பங்கீட்டில் சிக்கல்!

