Friday, November 13, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

பிகார் தேர்தலில் 17 புதிய நடைமுறைகள் அறிமுகம் – தேர்தல் ஆணையம் அறிவிப்பு | இந்தியா

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 7, 2025
in அரசியல் செய்திகள்
0
பிகாரில் 3 லட்சம் வாக்காளர்கள் வெளிநாட்டினர் என சந்தேகம் – தேர்தல் ஆணையம் நோட்டீஸ் | இந்தியா
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:October 07, 2025 8:10 AM IST

பிகாரில் சட்டமன்றத் தேர்தலை சுமுகமாக நடத்தும் வகையில், அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நூறு சதவீத இணையதள ஒளிபரப்பு உட்பட 17 புதிய நடைமுறைகளை தேர்தல் ஆணையம் அறிமுகம் செய்ய உள்ளது.

கோப்பு படம்கோப்பு படம்
கோப்பு படம்

243 தொகுதிகளை கொண்ட பிகார் மாநிலத்தில், முதல்கட்டமாக 121 தொகுதிகளுக்கு நவம்பர் 6ஆம் தேதியும், இரண்டாம் கட்டமாக 122 தொகுதிகளுக்கு நவம்பர் 11ஆம் தேதியும் வாக்குப்பதிவு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இரு கட்ட தேர்தல்களிலும் பதிவான வாக்குகள், நவம்பர் 14ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.

நவம்பர் 6ஆம் தேதி நடைபெறும் முதல் கட்டத் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் அக்டோபர் 10ஆம் தேதி தொடங்கி, 17ஆம் தேதி நிறைவடைகிறது. வேட்புமனுவுக்கான பரிசீலனை அக்டோபர் 18ஆம் தேதி நடைபெறும் என்றும், அக்டோபர் 20ஆம் தேதிவரை மனுவை திரும்பப் பெறலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், நவம்பர் 11ஆம் தேதி நடைபெறும் இரண்டாம் கட்டத் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் அக்டோபர் 13ஆம் தேதி தொடங்கி, 20ஆம் தேதி நிறைவடைகிறது.

இதனிடையே பிகாரில் சட்டமன்றத் தேர்தலை சுமுகமாக நடத்தும் வகையில், அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நூறு சதவீத இணையதள ஒளிபரப்பு உட்பட 17 புதிய நடைமுறைகளை தேர்தல் ஆணையம் அறிமுகம் செய்ய உள்ளது. அதன்படி, வாக்காளர்கள் வாக்குச்சாவடி மையங்களுக்கு வரும்போது தங்களது செல்போன்களை பாதுகாப்பாக வைத்துச் செல்ல வசதி ஏற்படுத்த தரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தலை சுமுகமாக நடத்தும் வகையில், அனைத்து வாக்குச்சாவடிகளிலும் றுறு சதவீத இணைய ஒளிபரப்பு மேற்கொள்ளப்படும், தேர்தல் நாளன்று வாக்குப்பதிவு சதவீத விபரங்கள் இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை, ‘இசிஐநெட்’ செயலியில் பதிவிடப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதை தவிர்க்க, ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் 1200 வாக்காளர்களுக்கு மிகாமல் இருக்க நடவடிக்கை, வாக்காளர்களுக்கு அதிகாரபூர்வமற்ற அடையாளச் சீட்டுகளை விநியோகிக்கும் மையங்களை வாக்குச்சாவடியில் இருந்து 100 மீட்டருக்கு அப்பால் அமைத்துக் கொள்ள அரசியல் கட்சியினருக்கு அனுமதி போன்றவையும் பிகார் தேர்தலில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இனி வரும் அனைத்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களிலும் இந்த புதிய நடைமுறை கடைபிடிக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

October 07, 2025 8:10 AM IST



.

Previous Post

கோவையின் புதிய அடையாளம்: 10 கி.மீ நீளம், தமிழ்நாட்டின் மிகப்பெரிய மேம்பாலம்! | Drone Shots

Next Post

செந்தில் பாலாஜி: “வழக்கை எதிர்கொள்ளும் எத்தனைபேர் ராஜினாமா செய்துள்ளனர்” – உச்ச நீதிமன்றம் கேள்வி | Senthil Balaji: “How many ministers facing the case have resigned” – Supreme Court

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
கரூர்: "விஜய் மாலை 4 மணிக்கு வந்திருந்தால் கூட இந்தத் துயரைத் தடுத்திருக்கலாம்" – செந்தில் பாலாஜி

செந்தில் பாலாஜி: ``வழக்கை எதிர்கொள்ளும் எத்தனைபேர் ராஜினாமா செய்துள்ளனர்" - உச்ச நீதிமன்றம் கேள்வி | Senthil Balaji: ``How many ministers facing the case have resigned'' - Supreme Court

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In