Friday, November 13, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

அழகிப் போட்டியில் அத்துமீறி நுழைந்த கும்பல்.. அதிர்ச்சியில் உறைந்த இளம் மாடல்கள்.. என்ன நடந்தது? | இந்தியா

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 7, 2025
in அரசியல் செய்திகள்
0
அழகிப் போட்டியில் அத்துமீறி நுழைந்த கும்பல்.. அதிர்ச்சியில் உறைந்த இளம் மாடல்கள்.. என்ன நடந்தது? | இந்தியா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:October 06, 2025 3:34 PM IST

‘மிஷ் ரிஷிகேஷ்’ அழகிப் போட்டி ஒத்திகையில் மாடல்களிடம் ராஷ்ட்ரிய இந்து சக்தி சங்கதன் அமைப்பினர் தகராறு செய்தது உத்தராகண்டில் சர்ச்சையை ஏற்படுத்தியது.

Rapid Read
அழகிப் போட்டியில் அத்துமீறி நுழைந்த கும்பல்அழகிப் போட்டியில் அத்துமீறி நுழைந்த கும்பல்
அழகிப் போட்டியில் அத்துமீறி நுழைந்த கும்பல்

உத்தராகண்ட் மாநிலத்தில் அழகிப் போட்டியில் பங்கேற்ற மாடல்களிடம் இந்து அமைப்பினர் தகராறு செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

உத்தராகண்ட் மாநிலம் ரிஷிகேஷ் நகரில், லயன்ஸ் கிளப் சார்பில் அழகிப் போட்டி நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி, ‘மிஷ் ரிஷிகேஷ்’ போட்டியில் பங்கேற்க மாடல்கள் ஆயத்தமாகினர். இறுதிச் சுற்றுக்கு முன்பு ரேம் வாக் செல்வது தொடர்பாக, ஓர் அரங்கத்தில் ஒத்திகையில் ஈடுபட்டிருந்தனர். அத்துடன், விதவிதமான ஆடைகளுடன் ஒய்யார நடை போட்டுக் கொண்டிருந்தனர்.

அப்போது, திடீரென ஒரு கும்பல் அந்த அரங்கத்திற்குள் அத்துமீறி நுழைந்தது. அவர்கள், தங்களை ராஷ்ட்ரிய இந்து சக்தி சங்கதன் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்று அறிமுகம் செய்துள்ளனர். மேலும், தங்களை கலாச்சார காவலர்கள் என்ற ரீதியில் பேசிக்கொண்டு மாடல்களிடம் மல்லுக்கட்டினர். ஏன் இப்படி அரைகுறை ஆடைகளை அணிந்து கொண்டு, ரிஷிகேஷின் பாரம்பரியத்தையும் கலாசாரத்தையும் சீரழிக்கிறீர்கள் என்று கொந்தளித்தனர். இதனைக்கண்டு இளம் பெண்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.

இதையடுத்து தங்களை கேள்வி கேட்க நீங்கள் யார்? என்று கேட்ட மாடல்கள், அழகிப் போட்டியில் இது போன்ற ஆடைகள் தான் அணிந்து கொள்வார்கள் எனவும் கூறியுள்ளார். இந்த ஆடைகளை ரிஷிகேஷியில் உள்ள கடைகளில் தான் வாங்கியதாக கூறிய மாடல்கள், கலாசாரம் சீரழிகிறது என்று நினைத்தால், அங்கு ஆடைகள் விற்கப்படுவதை தடுக்க முடியுமா என கிடுக்கிப்பிடி போட்டனர்.

அதையெல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாது என்று தெரிவித்த இந்து அமைப்பினர்,  தங்களை பொருத்தவரை அழகிப் போட்டியில் அரைகுறை ஆடை அணியக் கூடாது என திட்டவட்டமாக கூறினர். நிலைமை எல்லை மீறுவதை உணர்ந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், இந்து அமைப்பினரை சமாதானம் செய்து அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இதுதொடர்பான வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியபோதும், யாரும் புகார் அளிக்கவில்லை என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருந்தபோதும், வீடியோவின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. ‘மிஸ் ரிஷிகேஷ்’ போட்டிக்கான ஒத்திகையில் மாடல்கள் அரைகுறை ஆடை அணிந்ததாக கூறி, இந்து அமைப்பினர் தகராறில் ஈடுபட்ட சம்பவம் உத்தராகண்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
Location :

Rishikesh,Dehradun,Uttarakhand (Uttaranchal)

First Published :

October 06, 2025 3:34 PM IST

தமிழ் செய்திகள்/இந்தியா/

அழகிப் போட்டியில் அத்துமீறி நுழைந்த கும்பல்.. அதிர்ச்சியில் உறைந்த இளம் பெண்கள்.. என்ன நடந்தது?



.

Previous Post

Kantara: ரிஷப் ஷெட்டி மற்றும் படக்குழுவினருக்கு அண்ணாமலை பாராட்டு | Kantara Chapter 1: Rishabh Shetty’s Masterpiece Wins Praise Across India

Next Post

கோவையின் புதிய அடையாளம்: 10 கி.மீ நீளம், தமிழ்நாட்டின் மிகப்பெரிய மேம்பாலம்! | Drone Shots

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
கோவையின் புதிய அடையாளம்:  10 கி.மீ நீளம், தமிழ்நாட்டின் மிகப்பெரிய மேம்பாலம்! | Drone Shots

கோவையின் புதிய அடையாளம்: 10 கி.மீ நீளம், தமிழ்நாட்டின் மிகப்பெரிய மேம்பாலம்! | Drone Shots

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In