Last Updated:
தமிழ்நாட்டின் Coldrif இருமல் மருந்து விற்பனை தடை செய்யப்பட்ட நிலையில் தொடர்ந்து சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மத்திய பிரதேசத்தில் Coldrif இருமல் மருந்து குடித்து பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்த விவகாரத்தில் இருமல் மருந்தை பரிந்துரைத்த மருத்துவரை கைது செய்த போலீசார், காஞ்சிபுரத்தை சேர்ந்த மருந்து தயாரிப்பு நிறுவனம் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
காஞ்சிபுரத்தை சேர்ந்த ஸ்ரீசென் மருந்து நிறுவனத்தின் Coldrif இருமல் மருந்தை குடித்து மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில் 15க்கும் மேற்பட்ட குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதையடுத்து ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மாநிலங்களில் Coldrif இருமல் மருந்து விற்பனைக்கு தடை விதிக்கப்படது. மேலும், கேரளா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருந்து விற்பனை ரத்து செய்யப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக காஞ்சிபுரத்தை சேர்ந்த ஸ்ரீசென் மருந்து தயாரிப்பு நிறுவனம் மீது மத்திய பிரதேச போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். மேலும், Coldrif இருமல் மருந்தை பரிந்துரைத்த அரசு மருத்துவர் பிரவீன் சோனி என்பவரை போலீசார் கைது செய்தனர்.
தமிழ்நாட்டின் Coldrif இருமல் மருந்து விற்பனை தடை செய்யப்பட்ட நிலையில் தொடர்ந்து சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
October 05, 2025 9:04 PM IST
Coldrif இருமல் மருந்தை பரிந்துரைத்த மருத்துவர் கைது… காஞ்சிபுரத்தை சேர்ந்த மருந்து நிறுவனம் மீது வழக்குப்பதிவு

