Friday, November 13, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

இரும்பல் மருந்து உட்கொண்ட 10-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழப்பு! காஞ்சிபுரம் நிறுவனத்தால் நிகழ்ந்த சோகம் | இந்தியா

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 5, 2025
in அரசியல் செய்திகள்
0
இரும்பல் மருந்து உட்கொண்ட 10-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழப்பு! காஞ்சிபுரம் நிறுவனத்தால் நிகழ்ந்த சோகம் | இந்தியா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


உடல் நலக்குறைவு ஏற்பட்ட ஒன்று முதல் 7 வயதுடைய குழந்தைகள் 14 பேர் அடுத்தடுத்து உயிரிழந்தது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. சிகிச்சை பெற்ற பின்னர் திடீரென சிறுநீரகம் செயலிழந்ததே உயிரிழப்புக்கான காரணம் எனக் கூறப்பட்டது.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து மத்திய பிரதேச சுகாதாரத்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இதில், சந்தேகத்தின் பேரில் பல்வேறு நிறுவனங்களுக்கு சொந்தமான இருமல் மருந்துகள் உட்பட 5 மருந்துகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.

குறிப்பாக, தமிழ்நாட்டில் உள்ள காஞ்சிபுரத்தில் செயல்படும் ஸ்ரீசென் பார்மா நிறுவனம் தயாரிக்கும் கோல்ட்ரிஃப் (Coldrif) என்ற இருமல் மருந்தும் சோதனை செய்யப்பட்டது. அத்துடன், நெக்ஸ்ட்ரோ – டிஎஸ் (Nextro-DS) எனப்படும் மருந்தும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது.

அதில், கோல்ட்ரிஃப் மருந்தில் நச்சுத் தன்மை கொண்ட டை எத்திலீன் கிளைகால் என்ற ரசாயனம் 48.6 சதவீதம் அளவில் இருந்தது தெரியவந்துள்ளது. இது, பெயின்ட் மற்றும் மை போன்ற பொருட்களை தயாரிக்கப் பயன்படும் ஒரு வகை ரசாயனம் எனக் கூறப்படுகிறது.

இந்த ரசாயனத்தை இருமல் மருந்தில் அதிகளவில் கலக்கப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. உயிரிழந்த குழந்தைகளின் சிறுநீரக திசுவை சோதனை செய்ததில் டை எத்திலீன் கிளைகால் வேதிப்பொருள் இருந்தது அம்பலமாகியுள்ளது.

இதையடுத்து கோல்ட்ரிஃப் மற்றும் நெக்ஸ்ட்ரோ – டிஎஸ் மருந்துகளுக்கு மத்திய பிரதேச அரசு உடனடியாக தடை விதித்துள்ளது. மேலும், Coldrif மருந்தில் டை எத்திலீன் கிளைகால் இருந்ததை தமிழ்நாடு மருந்து கட்டுப்பாட்டு இயக்குநரகமும் உறுதி செய்துள்ளது.

ஸ்ரீசென் பார்மா நிறுவனத்தில் பேட்ச் 13-ல் தயாரிக்கப்பட்ட கோல்ட்ரிஃப் உட்பட 5 மருந்துகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் அந்நிறுவனத்தின் உரிமம் உடனடியாக ரத்து செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து தமிழ்நாட்டில் கோல்ட்ரிஃப் இருமல் மருந்து விற்பனைக்கு அரசு தடை விதித்துள்ளது.

காஞ்சிபுரத்தில் தயாரிக்கப்பட்ட கோல்ட்ரிஃப் இருமல் மருந்து மத்திய பிரதேசம், ராஜஸ்தான், ஒடிசா, புதுச்சேரிக்கு அனுப்பப்பட்டு வந்தது. தற்போது, இந்த மருந்தில் நச்சுப் பொருள் இருப்பது உறுதியானதால் தமிழ்நாட்டைத் தொடர்ந்து மத்திய பிரதேசம், ராஜஸ்தான், கேரளாவிலும் கோல்ட்ரிஃப் மருந்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், மத்திய பிரதேச மாநிலம் சிந்த்வாரா மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவர் பிரவீன் சோனி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர், தனியாக கிளினிக் நடத்தி வந்துள்ளார். தன்னிடம் சிகிச்சைக்காக வந்த குழந்தைகளுக்கு இருமல் மருந்து கொடுத்துள்ளார்.

இவரிடம், சிகிச்சை பெற்ற குழந்தைகளே அதிகளவில் உயிரிழந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் மருத்துவர் பிரவீன் சோனியை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஸ்ரீசென் பார்மா நிறுவனத்தின் மீதும் வழக்குப்பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இருமருந்து குடித்த 10-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்த நிலையில், மத்திய அரசு சார்பில் அவசர ஆலோசனை கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில், அனைத்து மாநில முதன்மை செயலாளர்கள், சுகாதாரத் துறை செயலாளர்கள் மற்றும் மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

அப்போது, இருமல் மருந்தின் தயாரிப்பு முறை மற்றும் அதன் தரம் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும், இருமல் மருந்துகளை குழந்தைகளுக்கு மருத்துவரின் பரிந்துரை இன்றி வழங்கக் கூடாது என்பன போன்ற கட்டுப்பாடுகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளன.

கடந்த 2022 ஆம் ஆண்டு ஆப்பிரிக்கா நாடான காம்பியாவில் இருமல் மருந்து குடித்த 66 குழந்தைகள் உயிரிழந்தனர். அப்போது, 4 நிறுவனங்களின் மருந்துகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. அதில், டை எத்திலீன் கிளைகால் மற்றும் எத்திலீன் கிளைகால் அதிக அளவில் இருந்தது தெரியவந்தது.

தற்போது, இதே குற்றச்சாட்டுதான் ஸ்ரீசென் பார்மா நிறுவனத்தின் கோல்ட்ரிஃப் மருந்து மீது எழுந்துள்ளது. எனவே, இந்த விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்குமா என்ற எதிர்பார்ப்பு பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

October 05, 2025 10:09 PM IST

தமிழ் செய்திகள்/இந்தியா/

இரும்பல் மருந்து உட்கொண்ட 10-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழப்பு! காஞ்சிபுரம் நிறுவனத்தால் நிகழ்ந்த சோகம்



.

Previous Post

"மனுதர்மத்தை நிலைநாட்டத் துடிக்கும் வெறியர்களுக்கெதிராக தமிழகம் போராடும்" -ஆளுநருக்கு முதல்வர் பதில்

Next Post

“பா.ஜ.க-வின் C டீம் தான் விஜய்" – விமர்சிக்கும் அமைச்சர் ரகுபதி

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
“பா.ஜ.க-வின் C டீம்  தான் விஜய்" – விமர்சிக்கும் அமைச்சர் ரகுபதி

``பா.ஜ.க-வின் C டீம் தான் விஜய்" - விமர்சிக்கும் அமைச்சர் ரகுபதி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In