Friday, November 13, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

"சேலம் 'Fake Wedding' நிகழ்ச்சிக்கு தடை விதிக்க வேண்டும்" -வேல்முருகன் காட்டம்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 5, 2025
in அரசியல் செய்திகள்
0
"சேலம் 'Fake Wedding' நிகழ்ச்சிக்கு தடை விதிக்க வேண்டும்" -வேல்முருகன் காட்டம்
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளில் நடைபெறுவது போல், சேலம் மாநகரில் ‘பேக் வெட்டிங்’ இன்று மாலை 6 மணிக்கு நடைபெறவுள்ளதாக சமூக வலைதளங்களில் போஸ்டர்கள் வெளியாகியிருக்கின்றன.

திருமண விழா கொண்டாட்டத்தை திருமணம் ஏதும் நடைபெறாமலே போலியாக நடத்தி, திருமணத்தில் பங்கேற்பதைப் போன்ற ஆடைகள், விருது, வரவேற்பு, கொண்டாட்டம் என வெளிநாடுகளில் இந்த நிகழ்ச்சி நடப்பது வழக்கம். இப்போது இந்தியாவிலும், தமிழ்நாட்டிலும் இது பரவி வருகிறது. இளைஞர்கள் நண்பர்கள், உறவினர்களின் திருமணத்திற்குச் சென்று கொண்டாடி மகிழ்வைப்போல இதில் கொண்டாடி மகிழ்கிறார்கள்.

Fake wedding
ஃபேக் வெட்டிங் போஸ்டர்
“நரித்தனம்; கரூர் சம்பவத்தை வைத்து விஜய்யுடன் பழனிசாமி கூட்டணி பேச்சுவார்த்தை” – டிடிவி காட்டம்!
‘ஃபேக் வெட்டிங்க்’ மற்றும்ம் ‘ஹேப்பி ஸ்ட்ரீட்’ நிகழ்ச்சிகள் கலாசார சீரழிவு

இந்நிலையில் இது கலாசார சீரழிவு என்று கண்டித்திருக்கும் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், “சேலம் மாவட்டத்தில் இது போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறுவதால் வருங்கால இளைய தலைமுறையினரின் வாழ்க்கை தடம் மாறி செல்வதற்கு வாய்ப்பாக அமைகிறது.

அதாவது, மாணவர்கள், இளைஞர்கள் தங்களுடைய தனித்திறமைகளை கல்வி, விளையாட்டு, கலை, விஞ்ஞானம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதித்தவர்களை, புதுமைகளை செய்தவர்களை அடையாளம் கண்டு அவர்களின் அனுபவங்களை பகிர்ந்துதல், திறமைகளை வெளிப்படுத்துதல் போன்ற சமூக நலன் சார்ந்த நிகழ்ச்சிகள் நடத்தினால், அது எதிர்கால இளைய தலைமுறைக்கு வழிகாட்டுதலாக இருக்கும்.

ஆனால், வியாபார நோக்கத்துடன், கலை நிகழ்ச்சிகள் என்ற பெயரால் நடுத்தெருவில் ஆபாச கூத்தும், கும்மாளமும் ஆடல், பாடல் என்ற பெயரில் கலாச்சார சீரழிவுக்கு வழிவகுக்கும், ‘ஃபேக் வெட்டிங்க்’ மற்றும்ம் ‘ஹேப்பி ஸ்ட்ரீட்’ நிகழ்ச்சிகள் நடத்த மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் அனுமதி வழங்குவது அதிர்ச்சி அளிக்கிறது.

கலாச்சார சீரழிவை ஏற்படுத்தும் சேலம் “ ஃபேக் வெட்டிங்க்” நிகழ்ச்சிக்கு தடை விதிக்க வேண்டும்!

அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளில் நடைபெறுவது போல், சேலம் மாநகரில் “ பேக் வெட்டிங்” இன்று மாலை 6 மணிக்கு நடைபெறவுள்ளது.
சேலம் மாவட்டத்தில் இது போன்ற நிகழ்ச்சிகள்… pic.twitter.com/kyQJxw9kkg

— Velmurugan.T (@VelmuruganTVK) October 5, 2025

“முதல்வர் ஸ்டாலின் பொறுப்போடு செயல்பட்டார்; பழிதீர்க்கும் நோக்கமில்லை; ஆனால் விஜய்” – டிடிவி தினகரன்

இந்த நிகழ்ச்சிக்கு பின்னால் வணிக நோக்கமும், கலாச்சாரத்தை சீரழிக்கும் நோக்கமும் இருக்கிறது என்பதை நாம் அனைவரும் உணர வேண்டும். இதன் காரணமாக, சேலத்தில் இன்று நடைபெறும், ‘ஃபேக் வெட்டிங்க்’ நிகழ்ச்சிக்கு தடை விதிக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மகளிர் அணி சார்பில், காவல்துறை அதிகாரிகளிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

எனவே இதனைக்கருத்தில் கொண்டு, தமிழ் சமூகத்தின் கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் சீரழிக்கும் “ ஃபேக் வெட்டிங்க்” நிகழ்ச்சிக்கு, மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் தடை விதித்து, வருங்கால சந்ததியினர் வளமாக வாழ வழி செய்ய வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக்கொள்கிறது.” என்று எக்ஸ் தளத்தில் கண்டித்திருக்கிறார்.





.

Previous Post

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் திமுகவை ஆதரித்தும், விஜய்யை எதிர்த்தும் நான் பேசவில்லை – டிடிவி தினகரன் |I did not speak in support of DMK or against Vijay in the Karur stampede incident – TTV Dhinakaran

Next Post

இனி ஃபாஸ்ட் டேக் இல்லைனாலும் கவலையில்லை… மாறுது ரூல்ஸ்!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
இனி ஃபாஸ்ட் டேக் இல்லைனாலும் கவலையில்லை… மாறுது ரூல்ஸ்!

இனி ஃபாஸ்ட் டேக் இல்லைனாலும் கவலையில்லை... மாறுது ரூல்ஸ்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In