Last Updated:
மகனின் உடலை அமெரிக்காவில் இருந்து ஹைதராபாத்துக்குக் கொண்டுவர மத்திய அரசின் உதவியை அவரது பெற்றோர் நாடியுள்ளனர்.
இந்தியாவை சேர்ந்த மாணவர் அமெரிக்காவில் உயர் கல்வி பயின்று வந்த நிலையில் அவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்த சந்திரசேகர் போலே, ஹைதராபாத்தில் பற்களுக்கான அறுவை சிகிச்சையில் (Dental Surgery) இளங்கலை பட்டம் பெற்ற பிறகு, 2023 ஆம் ஆண்டு உயர்கல்விக்காக அமெரிக்கா சென்றார்.
அவர் ஆறு மாதங்களுக்கு முன்பு அமெரிக்காவில் தனது முதுகலைப் பட்டத்தை முடித்தார். அதைத் தொடர்ந்து நிரந்தர வேலை தேடும் முயற்சியில் இருந்த அவர், பகுதி நேரமாக (part-time) அமெரிக்காவின் டல்லாஸில் செயல்பட்டு வந்த எரிவாயு நிலையத்தில் வேலை செய்து வந்தார்.
இந்த நிலையில் அவர் பணியில் இருந்தபோது நேற்றிரவு அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகனின் உடலை அமெரிக்காவில் இருந்து ஹைதராபாத்துக்குக் கொண்டுவர மத்திய அரசின் உதவியை அவரது பெற்றோர் நாடியுள்ளனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து ஆளும் பிஆர்எஸ் கட்சியின் எம்எல்ஏ சுதீர் ரெட்டி மற்றும் முன்னாள் அமைச்சர் டி. ஹரீஷ் ராவ் ஆகியோர் ஹைதராபாத்தில் உள்ள சந்திரசேகரின் வீட்டிற்குச் சென்று அவரது குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறினர்.
என்ன காரணத்திற்காக சந்திர சேகர் சுட்டுக் கொல்லப்பட்டார் என்பது குறித்த விபரங்கள் உடனடியாக தெரியவரவில்லை.
October 04, 2025 9:04 PM IST
அமெரிக்காவில் உயர்கல்வி பயின்று வந்த இந்திய மாணவர் சுட்டுக்கொலை.. பார்ட் டைம் வேலையில் இருந்தபோது ஏற்பட்ட துயரம்

