ஜெனரேட்டர் அறைக்குள் தவெக-வினர் நுழைந்த போதுதான் மின் விநியோகம் நிறுத்தப்பட்டது.
விஜய் வாகனத்தில் ஏறிய 5-வது நிமித்திடத்திலேயே செருப்பு வீசப்பட்டது. கூட்டத்தில் சிலர் கத்தியால் கீறி இருக்கிறார்கள் என்று கூறுகிறார்கள்.
அப்படி என்றால் காயங்கள் எங்கே? எந்த மருத்துவமனையில் அவர்கள் சிகிச்சைப் பெறுகிறார்கள்?
கூட்டத்தில் ஸ்பிரே அடித்திருந்தால், அது மீடியாவின் எந்த லைவிலும் வரவில்லையே ஏன்?

கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்த போதுதான் எனக்கு தகவல் வந்தது. மக்கள் பாதிக்கப்பட்ட நிலையில் உடனடியாகச் சென்றேன். நான் மருத்துவமனைக்குச் செல்லும்போது இரவு 7.47 மணி இருக்கும்.
அரசு தன் கடமையைச் செய்தது. அந்தக் கட்சி தன் கடமையைச் செய்யவில்லை. காவல்துறையினர் தன் கடமையைச் சிறப்பாகவே செய்தனர். கரூர் துயர நிகழ்வை மடை மாற்றம் செய்ய முயற்சிக்கும் வகையில் விஜய் செயல்படுகிறார்.
ஒரு தவறு நடந்தால் தப்பு செய்தவர்கள்தான் பொறுப்பேற்க வேண்டும். ஏழு மணி நேரம் தாமதமாக வந்தது ஏன் என விஜய்யிடம் கேள்வி கேளுங்கள்.
என்ன நடக்கிறது என்றே தெரியாதவர் எழுதி கொடுக்கும் பாட்டைப் பாடுகிறார். விஜய்யின் அனைத்து கூட்டங்களிலும் தொண்டர்கள் பாதிக்கப்படுகின்றனர்.
பாஜகவின் உண்மையைக் கண்டறியும் குழு ஏன் மணிப்பூருக்குச் செல்லவில்லை.
மணிப்பூருக்கும், குஜராத்திற்கும் செல்லாத குழு கரூருக்கு வந்தது முரண். சில அரசியல் கட்சிகள் உள்நோக்கத்தோடு குற்றம்சாட்டுகின்றன” என்று கூறியிருக்கிறார்.
