8. இந்த உதவிகள் இரு பக்கத்திற்கும் நடுநிலையான ஐ.நா, செஞ்சிலுவை போன்ற அமைப்புகளால் வழங்கப்படும். இந்த உதவிகளுக்காக ரஃபா கிராசிங் (எகிப்து – காசா எல்லை) திறக்கப்படும்.
9. காசா தற்காலிகமாக பாலஸ்தீனிய தொழில்நுட்பக் குழுவால் (அரசியல் சாராத நிபுணர்கள்) நடத்தப்படும். அவர்கள் தண்ணீர், மின்சாரம்… போன்ற அன்றாட தேவைகளைக் கவனித்துக் கொள்வார்கள்.
இவர்களது செயல்பாட்டை அதிபர் ட்ரம்ப் தலைமையிலான புதிய சர்வதேச அமைப்பு ‘சமாதானக் குழு’ கண்காணிக்கும். இந்த அமைப்பில் பிற உலக நாடுகளின் தலைவர்களும் இருப்பார்கள்.
பாலஸ்தீனம் சீர்திருத்தப்பட்டு பொறுப்பேற்கத் தயாராகும் வரை, இந்த அமைப்பு நிதி, நிர்வாகம் மற்றும் மறுவளர்ச்சியை நிர்வாகிக்கும்.

10. ட்ரம்ப் தலைமையிலான வளர்ச்சித் திட்டம் காசாவில் அறிமுகப்படுத்தப்படும். இந்தத் திட்டத்தில் வேலைவாய்ப்பு உருவாக்கம், முதலீடு ஈர்ப்பு, மறுகட்டமைப்பு போன்றவை அடங்கும்.
11. காசாவிற்குள் சிறப்பு வர்த்தக மண்டலம் உருவாக்கப்படும். இங்கே சந்தைகளுக்குள் நுழைய சிறப்பு அனுமதி, குறைந்த வரி போன்றவை வழங்கப்படும். மேலும், பிற நாடுகளிடம் பேசி பிசினஸ் மற்றும் வேலைவாய்ப்பு அதிகரிக்கப்படும்.
12. காசாவில் இருந்து வெளியேறுமாறு யாரும் கட்டாயப்படுத்தப்பட மாட்டார்கள். மக்கள் அவர்களுக்கு வேண்டும்போது செல்லலாம், திரும்ப வரலாம். மக்களை காசாவில் இருக்க வைப்பதும், காசாவை மறுகட்டமைப்பதும் தான் முக்கிய நோக்கம்.
