இந்த நிலையில், ஆனந்த்நாக் மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஒமர் அப்துல்லா, மாநில அந்தஸ்துக்காக எந்தவொரு அரசியல் சமரசத்தையும் ஏற்க மாட்டேன் எனக் கூறியுள்ளார்.
இதுபற்றி, அவர் பேசியதாவது:
“பாஜகவுடன் கூட்டணி அமைக்க நான் தயாராக இல்லை. அரசில் பாஜகவையும் சேர்க்க வேண்டும் என நீங்கள் விரும்பினால் எனது ராஜிநாமாவை ஏற்றுக்கொள்ளுங்கள். இங்குள்ள எம்எல்ஏ ஒருவரை முதல்வராகப் பதவி உயர்த்தி பாஜகவுடன் அரசு அமைத்துக்கொள்ளுங்கள்” என அவர் பேசியுள்ளார்.
இத்துடன், ஜம்மு – காஷ்மீரின் அரசில் பாஜக இணைந்தால், மத்திய அரசு விரைவாக மாநில அந்தஸ்து வழங்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிக்க: தில்லி கல்வி மைய இயக்குநர் சைதன்யானந்த் சரஸ்வதி கைது! டார்ச்சர் அறை கண்டுபிடிப்பு
