Last Updated:
விரிவாக்கப் பணிகள் முடிவடைந்ததால், விரைவில் அதிவிரைவு ரயில் சேவை தொடங்கும்
இந்தியாவின் இரண்டு மிக முக்கியமான பொருளாதார மையங்களான பெங்களூரு மற்றும் மும்பை இடையே புதிய அதிவிரைவு ரயில் சேவையைத் தொடங்க மத்திய ரயில்வே அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த தகவலை பாஜகவின் முக்கிய தலைவர்களில் ஒருவரான தேஜஸ்வி சூர்யா இன்று தெரிவித்துள்ளார்.
ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இந்தத் தகவல் வெளியிட்டதாகவும், இரண்டு முக்கிய நகரங்களை இணைக்கும் அதிவிரைவு ரயில் விரைவில் சேவையை தொடங்கும் என்றும் உறுதிப்படுத்தியதாக, தேஜஸ்வி சூர்யா கூறியிருக்கிறார்.
இது தொடர்பாக தேஜஸ்வி சூர்யா தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது-
பெங்களூரு மற்றும் மும்பை போன்ற முக்கிய நகரங்களை ஒரே ஒரு ரயிலான ‘உத்யான் எக்ஸ்பிரஸ்’ மட்டுமே இணைக்கிறது. அந்த ஒரே ஒரு ரயிலும் பயணத்தை முடிக்க 24 மணி நேரம் எடுத்துக்கொள்வதால், பெரும்பாலான மக்கள் பேருந்துகள் அல்லது விமானங்களைச் சார்ந்து இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதனால் பயணம் விலையுயர்ந்ததாகவும், வசதியற்றதாகவும் இருந்தது.
கடந்த நான்கு ஆண்டுகளாக, இரு நகரங்களுக்கிடையே கூடுதல் ரயில் சேவைகளுக்கான கோரிக்கைகளை தான் நாடாளுமன்றம் மற்றும் ரயில்வே வாரியத்தில் பலமுறை எழுப்பியிருந்தேன்.
ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், பெங்களூரு மற்றும் மும்பை ரயில் நிலையங்களில் பாதை திறன் (lane capacity) விரிவாக்கப்பட்டதன் மூலம் புதிய அதிவிரைவு ரயில் சேவையைச் சாத்தியமாக்கியுள்ளார். இந்த விரிவாக்கப் பணிகள் முடிவடைந்ததால், விரைவில் அதிவிரைவு ரயில் சேவை தொடங்கும் என்று அமைச்சர் உறுதி அளித்துள்ளார். என்று கூறியுள்ளார்.
September 27, 2025 9:07 PM IST
புதிய சூப்பர் ஃபாஸ்ட் ரயிலுக்கு மத்திய அரசு ஒப்புதல்.. 2 முக்கிய நகரங்களின் பயண நேரம் குறையும்..

