இன்று செப்டம்பர் 27) செய்தியாளர்கள் சந்திப்பில் சீமான் பேச்சு குறித்து விமர்சித்த டி.டி.வி. தினகரன், “கடந்த ஓராண்டாக சீமானின் பேச்சு தடுமாற்றமாகவும், ஏதோ கோபத்தின் வெளிப்பாடாகவும்தான் தெரிகிறது.
`தம்பி விஜய், நாங்கள் ஒன்றாகச் செயல்படுவோம்’ என்று பேசியவர், இன்று விஜய்யால் பாதிப்பு ஏற்பட்டுவிடும் என்ற அச்சத்தில் அவர் இருப்பது, விஜய் பற்றிய அவரின் பேச்சுக்களில் தெரிகிறது.

பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர் போன்ற தலைவர்களைப் பற்றி சீமான் பேசுவதைப் பார்க்கும்போது அவருடைய நாக்கில் சனி குடி கொண்டிருப்பதாகத்தான் நான் நினைக்கிறேன்.
இதுபோலப் பேசி தனக்கு விளம்பரத்தைத் தேடிக் கொள்கிறார். விஜய் மீது கோபமாக இருந்தால் அவரைப் பற்றிப் பேசட்டும்.
எதற்காகப் பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர் பற்றிப் பேச வேண்டும்? தமிழ்நாட்டில் பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர் ஆகியோரை விட்டுவிட்டு யாரும் அரசியல் செய்ய முடியாது. அதற்கு எதிராகச் செயல்பட்டால் தமிழ்நாட்டு மக்கள் வருங்காலத்தில் பதில் சொல்வார்கள்” என்று கூறினார்.
