Last Updated:
இதன் மூலம் இவ்விரு இடங்களுக்கு இடையிலான பயண தூரம் சுமார் 2 மணி முதல் 3 மணி நேரம் வரை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மகாராஷ்டிரா மற்றும் தெலுங்கானாவை இணைக்கும் வகையில் புதிதாக 2 வந்தே பாரத் ரயில்களை இயக்குவதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதன் அடிப்படையில் ஒரு ரயில் ஹைதராபாத் மற்றும் புனே இடையிலும் மற்றொரு ரயில் செகந்திராபாத் மற்றும் நந்தேத் இடையிலும் இயக்கப்பட உள்ளன.
இதன் மூலம் இவ்விரு இடங்களுக்கு இடையிலான பயண தூரம் சுமார் 2 மணி முதல் 3 மணி நேரம் வரை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது ஹைதராபாத்தில் 4 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன.
அதன் தொடர்ச்சியாக மகாராஷ்டிராவின் புனே மற்றும் நந்தேத் பகுதிகளுக்கு ஹைதராபாத்தில் இருந்து கூடுதல் ரயில் இயக்கப்பட உள்ளது. இதன் மூலம் தெலுங்கானா மற்றும் மகாராஷ்டிரா இடையிலான ரயில் போக்குவரத்து சேவையை பொதுமக்கள் அதிகம் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
இந்த திட்டத்தின் முக்கிய பகுதியாக செகந்திராபாத் மற்றும் புனே இடையே இயங்கி வந்த சதாப்தி ரயிலுக்கு பதிலாக வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படும். சதாப்தி ரயிலில் செல்லும் போது பயண நேரம் 8:30 மணி நேரமாக இருந்தது. இந்த ரயில் செவ்வாய்க்கிழமை தவிர்த்து வாரத்திற்கு 6 முறை குறைவான நிலையங்களில் நிறுத்தப்பட்டு இயக்கப்பட்டு வந்தது.
சதாப்தி ரயிலில் ஏசி சிறப்பு வகுப்புகள், 9 ஏசி கார் சேர் வகுப்புகள் உள்ளிட்டவை இடம்பெற்றிருந்தன. ஏற்கனவே நடைமுறையில் உள்ள செகந்திராபாத் – விசாகப்பட்டினம், செகந்திராபாத் – திருப்பதி, கட்சிகுடா- எஸ்வந்த்பூர் ஆகிய வழித்தடங்களில் இயக்கப்பட்டு வந்த வந்தே பாரத் ரயிலுக்கு நல்ல வரவேற்பு காணப்படுகிறது.
அதை தொடர்ந்து கூடுதல் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட உள்ளன. இதன் மூலம் தெற்கு மத்திய ரயில்வேயில் மொத்தம் ஏழு வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படும்
September 25, 2025 5:40 PM IST

