Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

வைரல் வீடியோ: வெறும் கையால் நாகப்பாம்பை பிடித்த போலீஸ்காரர்… இறுதியில் நடந்த விபரீதம் | இந்தியா

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 26, 2025
in அரசியல் செய்திகள்
0
வைரல் வீடியோ: வெறும் கையால் நாகப்பாம்பை பிடித்த போலீஸ்காரர்… இறுதியில் நடந்த விபரீதம் | இந்தியா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


இந்த சம்பவம் செப்டம்பர் 20 ஆம் தேதி சனிக்கிழமை இரவு நடந்தது. சதார் பஜார் பகுதியில் முதல் பட்டாலியனில் கிட்டத்தட்ட 17 ஆண்டுகள் பணியாற்றி வரும் சந்தோஷ் சவுத்ரி (47), பாம்புகளைப் பிடிப்பதில் அனுபவம் பெற்றவர், ஏற்கனவே அவர் பல முறை பாம்பை பிடித்துள்ளார். ஆனால் இந்த முறை, அவரது அனுபவம் பயனற்றது.

சனிக்கிழமை இரவு பாம்பைப் பிடிக்க ஒரு தொழுவத்திற்குச் சென்றபோது, ​​பாம்பு அவரது கையில் கடித்ததாகக் கூறப்படுகிறது. இந்த முழு சம்பவமும் வீடியோவில் பதிவாகியுள்ளது. பாம்பு தன்னை கடித்த போதிலும், அதை பிடிப்பதில் சந்தோஷின் துணிச்சலைத் தெளிவாகக் காணலாம். பாம்பு கடித்த பிறகு, அவர் விஷத்தை உறிஞ்ச முயன்று, கவலைப்பட ஒன்றுமில்லை என கூறுவதையும் வீடியோவில் காணலாம், ஆனால் படிப்படியாக அவருக்கு மயக்கம் வர ஆரம்பித்ததை அடுத்து தரையில் மயங்கி விழுந்தார்.

அதன்பிறகு, சுவாமி பிரசாத் சாஹு உள்ளிட்ட சக அதிகாரிகள் உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் விஷ எதிர்ப்பு மருந்து அவருக்கு பலனளிக்கவில்லை, இதன் காரணமாக அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த விபத்து அவரது மனைவி, மகன், மகள் மற்றும் சக ஊழியர்கள் மத்தியில் மிகுந்த துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

முதற்கட்ட விசாரணையில் அது ஒரு விஷமுள்ள நாகப்பாம்பு என்றும், அதன் கடி உடனடியாக மரணத்தை ஏற்படுத்தும் என்றும் தெரியவந்தது.

मध्यप्रदेश : इंदौर में कोबरा पकड़ने से एक कांस्टेबल की जान चली गई


◆ हालांकि कांस्टेबल संतोष पहले भी कई सांपों को पकड़ चुके थे

◆ लेकिन इस बार उन्होंने कोबरा को तो पकड़ा, लेकिन उसके काटने से उनकी मौत हो गई

◆ वीडियो कांस्टेबल की मौत से पहले का है#Indore | #Cobra |… pic.twitter.com/YkcNBpLoWR

— News24 (@news24tvchannel) September 22, 2025

வைரலாகும் வீடியோவில், அவர் கையுறைகள் அல்லது பாதுகாப்பு உபகரணங்கள் எதுவும் இல்லாமல், பாம்பை சாதாரணமாக கையாள்வதைக் காணலாம். சில நிமிடங்களில், நாகப்பாம்பு அவரது கையில் கடித்தது.

அதிகாரிகளின் கூற்றுப்படி, இரவு 9 மணியளவில் தொழுவத்தில் ஒரு பாம்பு இருப்பதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது. பாம்புகளை பிடிப்பதில் அனுபவம் இருந்ததால், சந்தோஷ் அந்த பாம்பை பிடிக்க அனுப்பப்பட்டார், என்று கூறியுள்ளனர்.

இந்த சம்பவத்தை குறித்து சந்தோஷின் சக ஊழியர்கள் கூறியதாவது, இதற்கு முன்பு பல முறை அவர் பாம்புகளை கையாண்டிருந்தாலும், இந்த முறை அவரது அனுபவம் அவருக்கு பலனளிக்கவில்லை. விஷ பாம்புகளைக் கையாள்வதற்கு அனுபவம் மட்டும் போதாது என்றும், கடுமையான பாதுகாப்பு உபகரணங்களும் தேவை என்பதையும் அவரது மரணம் நிரூபித்துள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர்.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

September 25, 2025 10:43 PM IST



.

Previous Post

தமிழர்களுக்கும், தெலுங்கர்களுக்கும் பல நூற்றாண்டுத் தொடர்பு உள்ளது; ரேவந்த் ரெட்டி பேச்சு | Tamils ​​and Telugus have centuries-old ties; Revanth Reddy speaks

Next Post

Ladakh GEN Z Protest – ஏன்? | NDA கூட்டணி உடையலாம்! – ADMK தலைவர் அதிரடி | Imperfect Show

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
Ladakh GEN Z Protest – ஏன்? | NDA கூட்டணி உடையலாம்! – ADMK தலைவர் அதிரடி | Imperfect Show

Ladakh GEN Z Protest - ஏன்? | NDA கூட்டணி உடையலாம்! - ADMK தலைவர் அதிரடி | Imperfect Show

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In