இந்த சொற்கள் மட்டுமின்றி, “cold brew – கோல்ட் பிரியூ,” “farm-to-table – ஃபார்ம் டூ டேபிள்,” “rizz – ரிஸ்,” “dad bod – டாட் போட்,” “hard pass – ஹார்டு பாஸ்,” “adulting- அடல்ட்டிங்”, “cancel culture – கேன்சல் கல்ச்சர்,” “beast mode – பீஸ்ட் மோட்,” “dashcam – டேஸ் கேம்,” “doomscroll – டூம்ஸ்க்ரோல்,” “WFH” மற்றும் “side-eye – சைடு ஐ” போன்ற சொற்களும் அகராதியில் இணைக்கப்பட்டுள்ளன.
WFH (வொர்க் ஃப்ரம் ஹோம் – வீட்டிலிருந்து வேலைப்பார்த்தல்), rizz (ரிஸ் – skill என்றும் கூறலாம்), beast mode (பீஸ்ட் மோட்) போன்ற சொற்கள் மேற்கத்திய மொழிகளைப் போன்று இருந்தாலும், சாதாரணமாகவே தமிழகத்தில்கூட இளைஞர்களால் சமூக வலைதளங்களில் பயன்பாட்டில் உள்ளன.
ஏற்கனவே உள்ள சொற்கள் மற்றும் புதியதாக சேர்க்கப்பட்ட சொற்கள் என 20,000 புதிய சொற்கள் எடுத்துக்காட்டுகளுடன் Merriam-Webster.com இணையத்தில் கிடைக்கின்றன.
அதைத் தவிர்த்து 11-வது பதிப்பிலிருந்து உயிரியல் மற்றும் புவியியல் தொடர்பாக அனைத்து சொற்களும் மெரியம்-வெப்ஸ்டர் அகராதியில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து மெரியம்-வெப்ஸ்டர் தலைவர் கிரெக் பார்லோ கூறும்போது, “கலாமசோ மற்றும் நிக்கோலாய் ரிம்ஸ்கி-கோர்சகோ உள்ளிட்டோரைப் பற்றி யாரும் இனி தேடப்போவதில்லை. அதற்காக அவர் இணையத்தைப் பயன்படுத்திக் கொள்வார்கள்.
(கலாமசோ – மிச்சிகனில் உள்ள ஒரு நகரம், நிக்கோலாய் ரிம்ஸ்கி-கோர்சகோ – ரஷியாவைச் சேர்ந்த இசையமைப்பாளர், இவர் 1908 ஆம் ஆண்டு மரணமடைந்துவிட்டார்.)
நாங்கள் இந்த அகராதியை அழகாகவும், ஆர்வமிகுந்ததாகவும் வடிவமைக்க விரும்புகிறோம். அனைவரும் வேடிக்கையாகவும் ஆராய்ச்சிக்காவும் பயன்படுத்த விரும்புகிறோம்” எனத் தெரிவித்தார்.
