Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

சினிமா பாணியில் இளம்பெண்ணை கடத்திய உறவினர்கள்.. சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு! | இந்தியா

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 25, 2025
in அரசியல் செய்திகள்
0
சினிமா பாணியில் இளம்பெண்ணை கடத்திய உறவினர்கள்.. சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு! | இந்தியா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:September 25, 2025 6:35 PM IST

காதல் திருமணம் செய்து கொண்ட தங்கள் வீட்டு பெண்ணை, உறவினர்கள் கும்பலாக சென்று, கை-கால்களை கட்டி போட்டு கடத்திச் சென்ற திடுக்கிடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

Rapid Read
பெண் கடத்தப்பட்ட சிசிடிவி காட்சிகள்பெண் கடத்தப்பட்ட சிசிடிவி காட்சிகள்
பெண் கடத்தப்பட்ட சிசிடிவி காட்சிகள்

தெலங்கானா மாநிலத்தில், காதல் திருமணம் செய்து கொண்ட தங்கள் வீட்டு பெண்ணை, உறவினர்கள் கும்பலாக சென்று, கை-கால்களை கட்டி போட்டு கடத்திச் சென்ற திடுக்கிடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

தெலங்கானா மாநிலம் மேட்ச்சல் மாவட்டம் கீசரா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கிராமம் நரசம்பள்ளி. இந்த கிராமத்தை சேர்ந்த ஸ்வேதா மற்றும் பிரவீன் ஆகியோர் கடந்த 8 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். ஸ்வேதா வீட்டினர் இந்த காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதனால் 4 மாதங்களுக்கு முன்பு இருவரும் வீட்டிற்குத் தெரியாமல் திருமணம் செய்து கொண்டனர்.

அப்போது முதல் ஸ்வேதா மற்றும் பிரவீன் குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே தகராறு இருந்து வந்துள்ளது. காதல் தம்பதிகள் இருவரும் உள்ளூரில் வசித்தால் பெண் வீட்டார் தொல்லை கொடுப்பார்கள் என்பதால், அவர்கள் செகந்திராபாத்துக்கு சென்று வீடு வாடகைக்கு எடுத்து வசித்து வந்துள்ளனர்.

இந்நிலையில், ஸ்வேதாவுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. ஸ்வேதாவை கவனிக்க ஆள் இல்லாத காரணத்தால் அவரை தனது சொந்த கிராமத்திற்கு கூட்டி செல்ல முடிவு செய்தார் பிரவீன். அதன்படி, கிராமத்தில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு ஸ்வேதாவை அழைத்துச் சென்று சிகிச்சை அளித்து வந்தார் பிரவீன். இவர்கள் இருவரும் கிராமத்தில் தான் இருக்கிறார்கள் என்ற தகவல் தெரியவந்ததும் கடும் ஆத்திரம் அடைந்த ஸ்வேதாவின் குடும்பத்தினர் ஒரு கும்பலாக பிரவீனின் வீட்டிற்குச் சென்றுள்ளனர்.

ஸ்வேதாவின் உறவினர்கள் சுமார் 6 பேர் கார் ஒன்றில் பிரவீன் வீட்டுக்குச் சென்று அதிரடியாக வீட்டிற்கு புகுந்து கடும் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் ஸ்வேதாவின் கை, கால்களை கயிற்றால் கட்டிப் போட்டு கதறகதற வீட்டிலிருந்து வெளியே தரதரவென இழுத்து சென்று காரில் கடத்திச் சென்றனர். அப்போது அவர்களை தடுக்க முயன்ற பிரவீன் குடும்பத்தாரை காட்டைகளால் பயங்கரமாக தாக்கியதுடன், அவர்களது கண்களில் மிளகாய்ப் பொடியைத் தூவி அலற விட்டுள்ளனர்.

இதையடுத்து பாதிக்கப்பட்ட பிரவீன் குடும்பத்தினர் நரசம்பள்ளி காவல்நிலையத்திற்கு சென்று புகார் அளித்தனர். வழக்கு பதிவு செய்த போலீசார் ஸ்வேதாவை கடத்திச் சென்றவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். காதல் திருமணம் செய்து கொண்ட தங்கள் வீட்டு பெண்ணை, உறவினர்கள் காரில் கடத்திச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

September 25, 2025 6:35 PM IST



.

Previous Post

13 மாத குழந்தை கொடூரக் கொலை! 17 ஆண்டு வழக்கில் கொலையாளிக்கு விஷ ஊசியால் மரண தண்டனை!

Next Post

22 ஆண்டுகளுக்குப் பிறகு மெரியம் – வெப்ஸ்டர் டிக்‌ஷனரி! 5,000 புதிய சொற்கள்!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
22 ஆண்டுகளுக்குப் பிறகு மெரியம் – வெப்ஸ்டர் டிக்‌ஷனரி! 5,000 புதிய சொற்கள்!

22 ஆண்டுகளுக்குப் பிறகு மெரியம் - வெப்ஸ்டர் டிக்‌ஷனரி! 5,000 புதிய சொற்கள்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In