Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

17 மாணவிகள் கொடுத்த பாலியல் புகார்… தலைமறைவான சாமியாரை தேடும் போலீஸ்! | இந்தியா

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 24, 2025
in அரசியல் செய்திகள்
0
17 மாணவிகள் கொடுத்த பாலியல் புகார்… தலைமறைவான சாமியாரை தேடும் போலீஸ்! | இந்தியா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:September 24, 2025 10:26 PM IST

ஸ்ரீ சாரதா இந்திய மேலாண்மை நிறுவன சாமியார் சைதன்யாநந்தா சரஸ்வதி மீது 17 மாணவிகள் பாலியல் புகார் அளித்த நிலையில், அவர் தற்போது தலைமறைவாகியுள்ளார்.

சைதன்யாநந்தா (எ) பார்த்தசாரதிசைதன்யாநந்தா (எ) பார்த்தசாரதி
சைதன்யாநந்தா (எ) பார்த்தசாரதி

டெல்லியை சேர்ந்த பிரபல சாமியார் தங்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக 17 மாணவிகள் புகார் அளித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அங்குள்ள வசந்த் குஞ்ச் பகுதியில் ஸ்ரீ சாரதா இந்திய மேலாண்மை நிறுவனம் செயல்பட்டு வருகிறது. அந்த நிறுவனத்தை சேர்ந்த சாமியார் சைதன்யாநந்தா சரஸ்வதி என்ற பார்த்தசாரதி, அங்கு முதுநிலை டிப்ளமோ பயிலும் மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இது தொடர்பாக 32 மாணவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் 17 மாணவிகள் தங்களை அந்த சாமியார் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக தெரிவித்ததாக கூறப்படுகிறது.

தங்களிடம் தவறான முறையில் பேசுவது, வாட்ஸ்அப்பில் தவறாக குறுஞ்செய்தி அனுப்புவது, அசௌகரியம் ஏற்படும் வகையில் தொடுவது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் அந்த சாமியார் மீது வைக்கப்பட்டுள்ளது.

மேலும், அந்த நிறுவனத்தில் உள்ள ஊழியர்கள் மற்றும் நிர்வாகிகள் சாமியரின் இச்சைக்கு அடிபணிய நிர்பந்தித்ததாகவும் மாணவிகள் கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மாணவிகள் அளித்த புகாரின் அடிப்படையில் அந்த சாமியார் மீது பாலியல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அந்த நிறுவனத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். மேலும், பேஸ்மெண்ட் பகுதியில் தவறான நம்பர் பிளேட்டுடன் வோல்வோ கார் ஒன்று இருந்த நிலையில் அதனை பறிமுதல் செய்தனர். குற்றம் சாட்டப்பட்ட சாமியார் தலைமறைவாக உள்ள நிலையில் அவரை தேடும் பணி நடந்து வருகிறது.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

September 24, 2025 10:26 PM IST



.

Previous Post

களைகட்டிய நவராத்திரி திருவிழா – புகைப்படங்கள்

Next Post

அன்புமணி: “தென்கொரியா, ஜப்பான், மொரிஷியஸ்ஸில் கூட மாம்பழம் சின்னத்தில் போட்டியிடுவார்கள்” – ராமதாஸ் | Anbumani: “They will contest with the mango symbol even in South Korea, Japan, and Mauritius” – Ramadoss

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
அன்புமணி: “தென்கொரியா, ஜப்பான், மொரிஷியஸ்ஸில் கூட மாம்பழம் சின்னத்தில் போட்டியிடுவார்கள்” – ராமதாஸ் | Anbumani: “They will contest with the mango symbol even in South Korea, Japan, and Mauritius” – Ramadoss

அன்புமணி: "தென்கொரியா, ஜப்பான், மொரிஷியஸ்ஸில் கூட மாம்பழம் சின்னத்தில் போட்டியிடுவார்கள்" - ராமதாஸ் | Anbumani: "They will contest with the mango symbol even in South Korea, Japan, and Mauritius" - Ramadoss

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In