தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குதல் மற்றும் மாநில அளவிலான அடைவுத்திறன் (SLAS 2025) ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
இதில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலந்து கொண்டார்.

பின் அமைச்சர் அன்பில் மகேஸ் செய்தியாளர்களைச் சந்தித்து பேசும்போது, ஆர்டிஇ (RTE) நிதியின் அதிக பங்கீடு மாநில அரசுதான் கொடுக்க வேண்டும் என மத்திய அமைச்சர் பிரதான் கூறியது குறித்த கேள்விக்கு, “60:40 என இருக்கும் பொழுது மாநில அரசு எப்படி முழுமையாக நிதி கொடுக்க முடியும். அவர் சொல்வது அரைகுறையாகக் கொடுத்து நிறுத்துங்கள் என்பது போல் உள்ளது.
