ஐக்கிய நாடுகள் அவையின் 80 வது பொதுக்குழு கூட்டத்தில் அதிபர் டொனால்ட் டிரம்ப் பங்கேற்றுப் பேசினார். இரண்டாவது முறையாக அதிபராக பதவியேற்ற பிறகு இக்கூட்டத்தில் டிரம்ப் பங்கேற்கிறார்.
உலக நாடுகளின் தலைவர்கள் முன்பு போரால் நிலவும் அசாதாரண சூழல் குறித்து அவர் பேசியதாவது,
”கடந்த ஏழு மாதங்களில் மட்டும், முடிவுறாத 7 போர்களை நிறுத்தியுள்ளேன். முடிவில்லாத போர் என அவர்கள் கூறினார்கள். சில நாடுகளில் 31 ஆண்டுகளாக நீடித்து வந்தது. சில நாடுகளில் 28 ஆண்டுகளாக நடைபெற்றது. இரக்கமற்ற முறையில் வெடித்த இந்த போரில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். கம்போடியா – தாய்லாந்து, கொசோவா – செர்பியா, இஸ்ரேல் – ஈரான், எகிப்து – எத்தியோப்பியா மற்றும் அமெரிக்கா – அஜர்பைஜான் நாடுகளின் போர்களும் அடங்கும்” எனப் பேசினார்.
இதோடுமட்டுமின்றி இந்தியா – பாகிஸ்தான் இடையே நீடித்து வந்த போரை இரவு முழுவதும் மத்தியஸ்தம் செய்து முடிவுக்கு கொண்டுவந்ததாகவும், அவர்கள் போரை நிறுத்த ஒப்புக்கொண்டதாக மே 10ஆம் தேதி சமூக வலைதளத்தில் அறிவித்ததாகவும் குறிப்பிட்டார். இதன்மூலம், இந்தியா – பாகிஸ்தான் இடையிலான போரை நிறுத்தியுள்ளதாக அதிபர் டிரம்ப், கிட்டத்தட்ட 50வது முறையாகப் பேசியுள்ளார்.
