Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

அண்ணியின் கற்பை சோதிக்க மைத்துனி செய்த பகீர் செயல்.. நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்! | இந்தியா

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 23, 2025
in அரசியல் செய்திகள்
0
அண்ணியின் கற்பை சோதிக்க மைத்துனி செய்த பகீர் செயல்.. நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்! | இந்தியா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:September 23, 2025 5:47 PM IST

பெண்ணின் கற்பை சோதிக்க செய்யப்பட்ட நூதன சோதனை காண்போரை கதிகலங்கச் செய்துள்ளது.

Rapid Read
குஜராத்தில் நடந்த கொடூரம்குஜராத்தில் நடந்த கொடூரம்
குஜராத்தில் நடந்த கொடூரம்

குஜராத்தில் அண்ணன் மனைவியின் நடத்தையில் சந்தேகம் கொண்ட மைத்துனி, கற்பை சோதிக்க கொதிக்கும் எண்ணெய்யில் கை வைக்க கூறி டார்ச்சர் செய்த சம்பவம் அரங்கேறியிருக்கிறது. 

உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான கோடிகள் செலவு செய்து நிலவுக்கும், செவ்வாய் கிரகத்திற்கு ராக்கெட் விட்டு சோதனை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இங்கு ஒரு பெண்ணின் கற்பை சோதிக்க செய்யப்பட்ட நூதன சோதனை காண்போரை கதிகலங்கச் செய்துள்ளது. இது என்னடா நூதன சோதனை என வியந்து கேட்கத் தூண்டும் அந்த சம்பவம் குஜராத்தில் நிகழ்ந்துள்ளது.

மனைவியின் நடத்தை மீது சந்தேகம் என்றால் நீதிமன்றத்திற்கு போகலாம், அல்லது மருத்துவமனைக்கு போகலாம். அது என்ன கொதிக்கும் எண்ணெய்யில் கைவிடச் செல்லும் பழக்கம் என்பது புரியாத புதிராகவே உள்ளது. கொதிக்கும் எண்ணெய்க்குள் கையை விட்டு கை வெந்து போனால் அவள் கற்பிழந்தவள். கை வேகவில்லை என்றால் அவள் கற்புள்ளவள். இப்படி ஒரு நூதன சிந்தனை பாதிக்கப்பட்ட பெண்ணின் மைத்துனிக்குத் தான் தோன்றியுள்ளது.

குஜராத் மாநிலம் விஜப்பூர் பகுதியில் உள்ள கெரிடா என்ற கிராமத்தில் கணவன் மற்றும் 2 குழந்தைகளுடன் பாதிக்கப்பட்ட 28 வயதான அந்த பெண் வசித்து வந்துள்ளார். கணவனை விட கணவனின் சகோதரிக்குத் தான் பெண்ணின் மீது சந்தேகம் தலைவிரித்தாடியுள்ளது. அண்ணனின் மனைவி மீது சரமாரியாக குற்றச்சாட்டுகளை சுமத்திய மைத்துனி, அவரது கற்பை பரிசோதிக்க அந்த காவியத் திட்டத்தை அரங்கேற்றியுள்ளார்.

கொதிக்கும் எண்ணெய்யில் கையை விட்டு உன் கற்பை நிரூபி எனக் கூறவும் மிரண்டு போனார் அந்த பெண். உலகம் முழுவதும் யார் கொதிக்கும் எண்ணெய்யில் கையை விட்டாலும் கை வெந்து தான் போகும். அதற்கும் கற்புக்கு என்ன சம்பந்தம் என்பது புரியாமல் தவித்திருக்கிறார் அந்த பெண். தன் கருத்தில் பிடிவாதமாக இருந்த மைத்துனி மேலும் இருவருடன் சேர்ந்து, அடுப்பை நோக்கி இழுத்துச் சென்று அந்த பெண்ணின் கைகளை கொதிக்கும் எண்ணெய்க்குள் கட்டாயப்படுத்தி அழுத்தியிருக்கிறார்கள்.

இதையும் படிங்க: சூயிங்கம் சாப்பிட்டு மூச்சுத் திணறல் ஏற்பட்ட சிறுமியை காப்பாற்றிய இளைஞர்கள்…! வைரலாகும் வீடியோ…

இதனால் அந்த பெண்ணின் கைகள் வெந்து போயின. அலறல் சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்தினர் வீட்டிற்கு விரைந்து சென்று, அவரை ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். பெண்ணின் புகாரை அடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். முதல் தகவல் அறிக்கையில் பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் மனுபாய் தாக்கூர், அவருடைய சகோதரி ஜமுனா தாக்கூர் ஆகியோருடன் மேலும் இருவர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். தமைறைவானவர்களை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

September 23, 2025 5:40 PM IST



.

Previous Post

தாயாகிறார் கத்ரீனா கைஃப்..! கணவருடன் இருக்கும் படத்தை வெளியிட்டு மகிழ்ச்சி!

Next Post

கொல்கத்தாவில் கனமழையால் இயல்பு வாழ்க்கை முடக்கம்! 30 விமானங்கள் ரத்து!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
கொல்கத்தாவில் கனமழையால் இயல்பு வாழ்க்கை முடக்கம்! 30 விமானங்கள் ரத்து!

கொல்கத்தாவில் கனமழையால் இயல்பு வாழ்க்கை முடக்கம்! 30 விமானங்கள் ரத்து!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In