Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

அரசு மருத்துவமனையில் போலீஸ்காரர்கள் அராஜகம்.. டாக்டரை வலுக்கட்டாயமாக இழுத்து சென்றதால் பரபரப்பு! | இந்தியா

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 23, 2025
in அரசியல் செய்திகள்
0
அரசு மருத்துவமனையில் போலீஸ்காரர்கள் அராஜகம்.. டாக்டரை வலுக்கட்டாயமாக இழுத்து சென்றதால் பரபரப்பு! | இந்தியா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:September 22, 2025 3:24 PM IST

உத்தரபிரதேசம் இட்டாவா அரசு மருத்துவமனையில் Dr. ராகுல் பாபுவை போலீசார் கட்டாயமாக அழைத்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Rapid Read
News18News18
News18

உத்தரபிரதேசத்தில் அரசு மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் பணியில் இருந்த மருத்துவரை, போலீஸ் சூப்பிரண்டின் தாயாருக்கு சிகிச்சை அளிப்பதற்காக போலீசார் வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் இட்டாவா மாவட்ட அரசு மருத்துவமனையில் கடந்த வியாழக்கிழமை நள்ளிரவில் அவசர சிகிச்சை பிரிவில் மருத்துவர் ராகுல் பாபு மற்றும் மருந்தாளுனர் சரத் யாதவ் ஆகியோர் பணியில் இருந்தனர். இந்நிலையில், இரவு 11 மணியளவில் ஒரு காவல் ஆய்வாளர் தலைமையில் சுமார் 4 போலீசார் மருத்துவமனைக்கு வந்துள்ளனர். அவர்கள் அத்துமீறி அவசர சிகிச்சை பிரிவிற்குள் நுழைந்து அங்கு பணியிலிருந்த டாக்டர் ராகுலிடம் பேசியுள்ளனர்.

இதனைத்தொடர்ந்து போலீஸ் சூப்பிரண்டண்ட் பிரிஜேஷ் குமாரின் தாயாருக்கு உடல் நிலை சரியில்லை என்றும், அவருக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதால் தங்களுடன் உடனடியாக வருமாறு மருத்துவரை அழைத்தனர். ஆனால் அப்போது பல நோயாளிகள் அவசர சிகிச்சை பிரிவில் இருந்ததால் அங்கிருந்து உடனடியாக வர முடியாது என்று மருத்துவர் ராகுல் பாபு மறுப்பு தெரிவித்திருக்கிறார்.

மேலும் அங்கு பணியிலிருந்த வேறு ஒரு மருத்துவரை அனுப்பி வைப்பதாகத் தெரிவித்துள்ளார். இதனால் கோபமடைந்த போலீஸ் அதிகாரிகள் டாக்டர் ராகுலிடம் கடுமையாகப் பேசி அவரைக் கட்டாயப்படுத்தி அங்கிருந்து கடத்திச்செல்வது போன்று போலீஸ் சூப்பிரரெண்ட் வீட்டிற்கு அழைத்துச்சென்றனர். மேலும் மருத்துவரின் செல்போனையும் போலீசார் பறித்து கொண்டனர்.

மருத்துவர் ராகுல் பாபுவை கட்டாயப்படுத்தி இழுத்துச் சென்றதால் அவசர சிகிச்சை பிரிவில் சுமார் இரண்டரை மணி நேரம் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதுகுறித்து டாக்டர் ராகுல் உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளார். அதோடு மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி புறநோயாளிகள் பிரிவை மூடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் சிகிச்சைக்காக வந்த நோயாளிகள் அவதி அடைந்தனர்.

இதையும் படிங்க: ஒரு பைசா செலவு இல்லை.. இந்தியாவில் இந்த ரயிலில் மட்டும் தான் 3 வேளையும் இலவச உணவு.. எந்த ரயில் தெரியுமா?

மேலும் இச்சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகளும் இணையதளத்தில் பரவி வைரலானது. தலைமை மருத்துவ அதிகாரி பிரிஜேந்திர குமார் தலையிட்டு ஊழியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை அமைதிபடுத்தினார். இதுகுறித்து டிஜிபிக்கு முறைப்படி புகார் செய்யப்படும் என்று உறுதியளித்தார். இதனிடையே போலீசாரின் செயலை கண்டித்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரிஜேஸ் குமார் ஸ்ரீவஸ்தவா, தான் அரசு மருத்துவரை அழைத்து வரும்படி கூறவில்லை என்றும் தனியார் மருத்துவரை தான் அழைத்து வருமாறு கூறியதாகவும் தெரிவித்தார்.

மேலும் போலீசாரின் நடவடிக்கைகள் தனக்கு அதிருப்தியை ஏற்படுத்தியிருப்பதாகவும் தெரிவித்தார். அதே நேரம் அரசு மருத்துவர்கள் காவல்துறையினரின் செயலை மன்னிக்க முடியாது என்றும் இதில் தொடர்புடைய போலீசார் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினர். மருத்துவர்களின் பலத்த எதிர்ப்பையடுத்து, அனிருத் சாகு மற்றும் ஹிதேஷ் வர்மா என்ற இரண்டு தலைமை காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் உத்தரபிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

September 22, 2025 3:24 PM IST

தமிழ் செய்திகள்/இந்தியா/

அரசு மருத்துவமனையில் போலீஸ்காரர்கள் அராஜகம்.. டாக்டரை வலுக்கட்டாயமாக இழுத்து சென்றதால் பரபரப்பு!



.

Previous Post

ஜிஎஸ்டி வரி குறைப்பைத் ஆவின் நிறுவனம் நடத்தும் நாடகங்கள் அப்பட்டமான திருட்டுத்தனம்; அன்புமணி தாக்கு | PMK Anbumani says Aavin dramas about GST tax cuts are blatant plagiarism

Next Post

செப். 29-இல் இடைநிலை ஆசிரியா்கள் போராட்டம்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
செப். 29-இல் இடைநிலை
ஆசிரியா்கள் போராட்டம்

செப். 29-இல் இடைநிலை ஆசிரியா்கள் போராட்டம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In