Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

சாலை வசதி இல்லை.. டோலியில் சுமந்து செல்லப்பட்ட கர்ப்பிணி.. வழியிலேயே பிறந்த குழந்தை..! | இந்தியா

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 22, 2025
in அரசியல் செய்திகள்
0
வறுமையின் கோரப்பிடியிலும் 17வது குழந்தையைப் பெற்றெடுத்த 55 வயது பெண்… பின்னணி என்ன…? | இந்தியா
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:September 22, 2025 5:34 PM IST

ஆஷா பணியாளர்கள் மற்றும் உள்ளூர் பெண்கள் இணைந்து அந்தப் பெண்ணுக்கு உதவி செய்தனர். பின்னர், தாயும் குழந்தையும் பாதுகாப்பாக ஆம்புலன்ஸில் ஏற்றி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

News18News18
News18

தெலங்கானாவில் சாலை இணைப்பு இல்லாத கிராமத்தில் பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணிப் பெண்ணை கிராம மக்கள் ஸ்ட்ரெச்சரில் வைத்து தூக்கிச் சென்ற சம்பவம் அரங்கேறியுள்ளது.

தெலங்கானாவில் சாலை இணைப்பு இல்லாததால், மருத்துவ சேவையைப் பெற முடியாமல், ஒரு கர்ப்பிணிப் பெண் சாலையோரத்திலேயே குழந்தையைப் பெற்றெடுத்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் நடந்துள்ளது. பத்ராத்ரி கோத்தகுடேம் மாவட்டத்தில் வசித்து வந்த கர்ப்பிணி, திடீரென கடுமையான பிரசவ வலியால் அவதிப்பட்டார். இதையடுத்து, அவரது குடும்பத்தினர் உடனடியாக ஆம்புலன்ஸ் உதவியை நாடினர். ஆனால், கிராமத்திற்கு சாலை வசதி இல்லாததால், ஆம்புலன்ஸ் அங்கு செல்ல முடியாமல் போனது. மாற்று வழியின்றி, கிராம மக்கள் ‘டோலி’ (தற்காலிக ஸ்ட்ரெச்சர்) தயார் செய்து அதில் அந்த கர்ப்பிணிப் பெண்ணை வைத்து காட்டுப் பகுதி வழியாக சுமந்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லத் தொடங்கினர்.

ஆனால், பாதியிலேயே பிரசவ வலி தீவிரமடைந்ததால், அந்தப் பெண்ணின் உடல்நிலை மோசமடைந்தது. அப்போது கிராம மக்கள் உடனடியாக அவருக்கு உதவியளிக்க, அவர் சாலையோரத்திலேயே குழந்தையைப் பெற்றெடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த ஆம்புலன்ஸ் தாயையும், புதிதாகப் பிறந்த குழந்தையையும் சத்யநாராயணபுரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றது. தற்போது தாய், சேய் என இருவரும் சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுபோன்று நடப்பது ஒன்றும் முதல் முறையல்ல. கடந்த மாதம் சங்கரெட்டி மாவட்டத்திலும் இதேபோன்ற ஒரு சூழ்நிலை ஏற்பட்டது. அங்கு, தொலைதூர கிராமத்தில் வசித்து வந்த கர்ப்பிணி ஒருவருக்கு பிரசவ வலி ஏற்பட்ட போது, ஆம்புலன்ஸ் கிராமத்தை அடைய முடியாததால், கிராம மக்கள் இணைந்து அவரை தோளில் சுமந்து இரண்டு கிலோ மீட்டர் தூரம் அழைத்துச் சென்றனர். ஆனால், பாதியிலேயே விவசாய நிலங்களில் அவர் குழந்தையைப் பெற்றெடுத்தார். அப்போதும், ஆஷா பணியாளர்கள் மற்றும் உள்ளூர் பெண்கள் இணைந்து அந்தப் பெண்ணுக்கு உதவி செய்தனர். பின்னர், தாயும் குழந்தையும் பாதுகாப்பாக ஆம்புலன்ஸில் ஏற்றி நாராயண்கேட் பகுதி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இந்த தொடர்ச்சியான சம்பவங்கள், தொலைதூர கிராமங்களில் அடிப்படை சாலை வசதி மற்றும் அவசர மருத்துவ சேவைகள் இன்னும் எவ்வளவு குறைவாக உள்ளன என்பதை வெளிப்படையாக காட்டுகின்றன. சாலை வசதியின்மையால் ஆம்புலன்ஸ் சேவையை பெற முடியாத சூழ்நிலை, உயிருக்கு ஆபத்தான தருணங்களில் பொதுமக்களை பெரும் சிக்கலில் ஆழ்த்துகிறது. நிபுணர்கள், இத்தகைய பிரச்சனைகளைத் தீர்க்க அரசாங்கம் உடனடி நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.

இந்த சம்பவம், தெலுங்கானா மட்டுமல்ல நாட்டின் பல தொலைதூர கிராமங்களில் சாலை இணைப்பு மற்றும் மருத்துவ அடிப்படை வசதிகள் இன்னும் போதுமான முறையில் இல்லாததையே காட்டுகிறது. கர்ப்பிணிப் பெண்களின் உயிர் பாதுகாப்புக்காக சாலை, ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவ சேவைகள் உடனடியாக கிடைக்கச் செய்வது அரசு மற்றும் உள்ளூர் நிர்வாகத்தின் கடமையாகும். இல்லையெனில், இத்தகைய துயர சம்பவங்கள் மீண்டும் மீண்டும் நிகழும் அபாயம் நீடித்துக் கொண்டே இருக்கும் என்பதே கவலைக்குரிய விஷயமாகும்.

முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

September 22, 2025 5:34 PM IST



.

Previous Post

ஜெ.பி.நட்டாவுடன் நயினார் நாகேந்திரன் ஆலோசனை!

Next Post

`விஜயனும் ஸ்டாலினும் நாஸ்திக் டிராமாச்சாரிகள்’ – சபரிமலை பாதுகாப்பு சங்கமத்தில் அண்ணாமலை பேச்சு! | Annamalai slams stalin and pinarayi vijayan in ketala

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
`விஜயனும் ஸ்டாலினும் நாஸ்திக் டிராமாச்சாரிகள்’ – சபரிமலை பாதுகாப்பு சங்கமத்தில் அண்ணாமலை பேச்சு! | Annamalai slams stalin and pinarayi vijayan in ketala

`விஜயனும் ஸ்டாலினும் நாஸ்திக் டிராமாச்சாரிகள்' - சபரிமலை பாதுகாப்பு சங்கமத்தில் அண்ணாமலை பேச்சு! | Annamalai slams stalin and pinarayi vijayan in ketala

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In