Last Updated:
மூச்சுத்திணறிய அந்த சிறுமி சைக்கிளை அந்த இளைஞர்கள் நின்ற பக்கமாகச் சென்று அவர்களிடம் உதவி கேட்டுள்ளார்
கேரள மாநிலம் கண்ணூரில், 8 வயதுச் சிறுமி சூவிங் கம் சாப்பிட்டு தொண்டையில் சிக்கி மூச்சுத்திணறலுக்கு ஆளானபோது, அருகிலிருந்த இளைஞர்களின் உடனடி நடவடிக்கையால் அந்த சிறுமி காப்பாற்றப்பட்டார். இதுகுறித்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது.
கண்ணூரில் 8 வயது சிறுமி ஒருவர் சைக்கிள் மிதிப்பதற்கு முன்பாக சூவிங் கம்மை வாயில் போட்டுக்கொண்டுள்ளார். அவர் சூயிங் கம் மென்றவாறு சைக்கிளை ஓட்டிச் சென்றபோது திடீரென அது அவரது தொண்டைக்குள் சிக்கிக்கொண்டுள்ளது.
நல்வாய்ப்பாக அவருக்கு அருகிலேயே 4 இளைஞர்கள் நின்றுகொண்டிருந்தனர். மூச்சுத்திணறிய அந்த சிறுமி சைக்கிளை அந்த இளைஞர்கள் நின்ற பக்கமாகச் சென்று அவர்களிடம் உதவி கேட்டுள்ளார். சிறுமிக்கு நடந்த சம்பவத்தைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அந்த இளைஞர்கள் துரிதமாகச் செயல்பட்டு முதலுதவி அளித்தனர்.
‘When strangers became heroes’
An eight-year-old girl in Kerala was saved by a group of young men after she began choking on Chewing Gum. The child approached them feeling unwell, and they quickly helped her expel the gum.This should go viral. ❤️ pic.twitter.com/lIbQY9Jcsf
— Gabbar (@Gabbar0099) September 21, 2025
இதனை எக்ஸ் தளத்தில் கப்பார் என்பவர் வெளியிட்டு “அறிமுகம் இல்லாத நபர்கள் ஹீரோக்களாக மாறிய தருணம்” என்று இந்த வீடியோவை குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோவுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
September 22, 2025 5:49 PM IST
Viral Video : சூயிங் கம் தொண்டையில் சிக்கி மூச்சுத் திணறிய 8 வயது சிறுமி.. முதலுதவி கொடுத்து மீட்ட இளைஞர்கள்..

