Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

கூட்ட நெரிசலைக் குறைக்க தெற்கு ரயில்வே புதிய முயற்சி… QR செயல்படுத்தப்பட்ட ஜாக்கெட்டுகள் அறிமுகம்…! | இந்தியா

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 21, 2025
in அரசியல் செய்திகள்
0
கூட்ட நெரிசலைக் குறைக்க தெற்கு ரயில்வே புதிய முயற்சி… QR செயல்படுத்தப்பட்ட ஜாக்கெட்டுகள் அறிமுகம்…! | இந்தியா
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


செகந்திராபாத்: தசரா மற்றும் தீபாவளி பண்டிகைக் காலத்தில் ரயில் நிலையங்களில் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால், தெற்கு மத்திய ரயில்வே (SCR) ஒரு புதுமையான முயற்சியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த முயற்சி பயணிகளுக்கு விரைவான மற்றும் வசதியான டிக்கெட் சேவையை வழங்க வடிவமைக்கப்பட்டுள்ள UTS (Unreserved Ticketing System) என்ற செயலியை ஊக்குவிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.

வரவிருக்கும் பண்டிகைக் காலத்தில் பயணிகளின் அதிக கூட்டத்தை நிர்வகிப்பதற்காக, செகந்திராபாத், திருப்பதி மற்றும் மற்ற முக்கிய ரயில் நிலையங்களில், ஊழியர்கள் தங்களது பின்புறத்தில் QR கோடுகள் அச்சிடப்பட்ட ரெட்ரோ-ரிஃப்ளெக்டிவ் ஜாக்கெட்டுகள் அணிந்து பணியமர்த்தப்படுவர் என்று தெரிவித்துள்ளது. இந்த ஜாக்கெட்டுகளை அணிந்த ஊழியர்கள், ரயில் நிலையத்தின் கூட்டங்கள், நுழைவு மற்றும் வெளியேறும் வாயில்கள், டிக்கெட் கவுன்டர்களுக்கு அருகிலுள்ள மக்கள் கூட்டம் அதிகமான பகுதிகளில் பயணிகளுக்கு உதவுவார்கள்.

பயணிகள் UTS மொபைல் செயலி அல்லது ரயில் ஒன் செயலியைப் பயன்படுத்தி QR கோடை ஸ்கேன் செய்து முன்பதிவு செய்யப்படாத டிக்கெட்டுகளை உடனடியாக வாங்கலாம். இதனால், டிக்கெட் கவுன்டர்களில் நீண்ட வரிசைகள் தவிர்க்கப்படும். இந்த முயற்சி பயணிகளுக்கு செயலியின் வசதிகளை அறிமுகப்படுத்துவதோடு, பணமில்லா பரிவர்த்தனைகள் மற்றும் காகிதமில்லா டிக்கெட்டின் நன்மைகளை விளக்குகிறது.

தெற்கு மத்திய ரயில்வேயின் தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி ஏ.ஸ்ரீதர் இது குறித்து கூறியதாவது, “முன்பதிவு செய்யப்படாத டிக்கெட்டுகளுக்கான நவீன தீர்வாக UTS மொபைல் ஆப் பயன்பாடு நிலையான பிரபலத்தைப் பெற்றுள்ளது. பயணிகள் ரயில் நிலைய வளாகங்கள் அல்லது ரயில் பாதைகளில் குறைந்தபட்சம் 5 மீட்டர் தொலைவில் இருந்தால் போதும், எங்கிருந்தும் பயண டிக்கெட்டுகள், பிளாட்ஃபார்ம் டிக்கெட்டுகள் மற்றும் சீசன் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம். இதனால் பயணிகள் தங்கள் வீடுகளிலிருந்தே டிக்கெட்டுகளை வாங்கி பண்டிகைக் காலத்தில் சுமூகமாக பயணம் செய்ய முடியும்” என்றார்.

QR கோடுகள் கொண்ட ஜாக்கெட்டுகள் மற்றும் செயலி அடிப்படையிலான டிக்கெட்டுகள் இணைக்கப்படுவதன்மூலம், தெற்கு மத்திய ரயில்வே டிக்கெட் கவுன்டர்களில் நெரிசலைக் குறைக்கவும், டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கவும் மற்றும் பண்டிகைக் காலத்தில் பயணிகளுக்கு விரைவான மற்றும் வசதியான பயண அனுபவத்தை வழங்கும் நோக்கத்துடனும் செயல்படுகிறது.

முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

September 21, 2025 10:51 AM IST

தமிழ் செய்திகள்/இந்தியா/

கூட்ட நெரிசலைக் குறைக்க தெற்கு ரயில்வே புதிய முயற்சி… QR செயல்படுத்தப்பட்ட ஜாக்கெட்டுகள் அறிமுகம்…!



.

Previous Post

விஜய் பரீட்சை எழுதட்டும்; திமுகவுக்கு மாற்று அதிமுகதான்: ஆர்.பி.உதயகுமார்

Next Post

இபிஎஸ்ஸுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
இபிஎஸ்ஸுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு!

இபிஎஸ்ஸுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In