Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

தமிழக வெற்றிக் கழகம் விஜய்: பரப்புரை மேற்கொள்ள நாகை வந்தடைந்தார் விஜய் | TVK Vijay Campaign Live Updates: Nagapattinam & Tiruvarur | Public Rally & Speech Updates

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 21, 2025
in அரசியல் செய்திகள்
0
தமிழக வெற்றிக் கழகம் விஜய்: பரப்புரை மேற்கொள்ள நாகை வந்தடைந்தார் விஜய் | TVK Vijay Campaign Live Updates: Nagapattinam & Tiruvarur | Public Rally & Speech Updates
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


“பெரம்பலூர் மக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். சீக்கிரமாக உங்களை வந்து சந்திக்கிறேன்”- தவெக விஜய்

நாகை: த.வெ.க. தலைவர் விஜயின் முழு உரை

அராஜக அரசியல் வேண்டாம் சிம்.எம் சார். நான் தனியாள் இல்லை. கொள்கையை பெயருக்கு மட்டும் வைத்துக்கொண்டு குடும்பத்தை வைத்து கொள்ளை அடிக்கும் உங்களுக்கு இவ்வளவு இருந்தால், உழைத்து சம்பாதிக்கும் எனக்கு எவ்வளவு இருக்கும் – விஜய்

2026 சட்டமன்றத் தேர்தலுக்காக தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் மாவட்டம் வாரியாக தேர்தல் பரப்புரை தொடங்கியுள்ளார். கடந்த வாரம், திருச்சி, அரியலூர் மாவட்டங்களில் பிரச்சாரம் செய்தவர் இன்று நாகப்பட்டினம், திருவாரூரில் பேசினார். நாகப்பட்டினம் அண்ணா சிலை அருகே விஜய் பேசினார். இதற்காக த.வெ.க தொண்டர்கள் திரண்டிருந்தனர். விவசாயிகள் பாதுகாவலன், மீனவ நண்பன் போன்ற வாசகங்கள் அடங்கிய ப்ளக்ஸ் பேனர் வைத்திருந்தனர். விஜய் பஸ் வருவதற்கு முன்பு 108 ஆம்புலன்ஸ் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. விஜய்க்கு தொண்டர் சுமார் ஆறு அடி உயரம் கொண்ட வேல் வழங்கினார். இதில் விஜய் பேசுகையில், எல்லாருக்கும் வணக்கம், இப்ப நான் எந்த மண்ணில் நிற்கிறேன் தொியுமா. நாகூர் ஆண்டவர்கள் அன்போட, நெல்லுக்கடை மாரியம்மன், அன்னை வேளாங்கண்ணி ஆசியுடன், கடல் தாய் மடியில் இருக்கும் என் மனதிற்கு நெருக்கமான நாகை மண்ணில் இருக்கிறேன். நெஞ்சில் குடியிருக்கும் உங்கள் அனைவருக்கும் என்றும் ஒரு மீனவ நண்பனாக இருக்கிற விஜயின் அன்பு வணக்கங்கள்.

கப்பல் இறங்கும் பொருட்களை எல்லாம் விற்பனை செய்வதற்காக அந்த காலத்தில் அந்தி கடைகள் நாகப்பட்டினத்தில் இருக்கும் என்று கேள்விப்பட்டு உள்ளேன். மீன் பிடிக்கும் தொழில், மற்ற தொழில்கள், விவசாயம், எந்தப் பக்கம் திரும்பினாலும் எப்படிப் பார்த்தாலும் உழைக்கிற மக்கள் இருக்கும் ஊர் தான் நாகப்பட்டினம் . மத வேறுபாடு இல்லாத, அனைவருக்கும் பிடித்துப் போன மதச்சார்பின்மைக்கு எடுத்துக்காட்டாக வாழ்கிற உங்கள் அனைவருக்கும் சிரம் தாழ்ந்த சிறப்பு வணக்கம்.

தமிழகத்தில் மீன் ஏற்றுமதியில் 2-ம் இடத்தில் இருப்பது நாகப்பட்டினம் துறைமுகம் தான். அங்கு நவீன வசதிகளுடன் மீன் பதப்படுத்துகிற நவீன தொழிற்சாலை இல்லை. அது மட்டுமின்றி அடிப்படை வசதிகள் கொண்ட வீடுகள் இல்லாமல், ரொம்ப அதிகமாக குடிசை இருக்கும் ஊர் நம்ம நாகப்பட்டினம்தான். இந்த முன்னேற்றத்திற்கெல்லாம் எங்கள் ஆட்சி தான் சாட்சி என்று அடுக்குமொழியில் பேசி, அதைக் கேட்டு காதில் ரத்தம் வந்தது தான் மிச்சம். இவர்கள் ஆண்டது பத்தாதா. பத்தாதா. மக்கள் தவிப்பது பத்தாதா.

இலங்கை கடற்படையால் நம்ம மீனவர்கள் தாக்கப்படுவதையும் அதற்கான காரணம், தீர்வு பற்றியும் மதுரை மாநாட்டில் பேசியிருந்தேன். அது ஒரு தப்பா . மீனவர்களுக்காக குரல் கொடுப்பதும் அவர்களுக்காக நிற்பதும் நமது கடமை நமது உரிமை. நான் மீனவர்களுக்காக இன்று நேற்று அல்ல. இதே நாகப்பட்டினத்தில் 14 வருடத்திற்கு முன்பு 2011ல் பிப்ரவரி 22 அன்று மீனவர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து ஒரு பொதுக்கூட்டம் நடத்தினேன். இந்த விஜய் களத்திற்கு வருவது ஒன்றும் புதிதல்ல. முன்பெல்லாம் விஜய் மக்கள் இயக்கம் என்ற இயக்கமாக வந்து நிற்போம். தற்போது தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் இயக்கமாக வந்துள்ளோம். அவ்வளவு தான் வித்தியாசம். அன்றும் இன்றும் எப்போது மக்களுக்காக, மக்களோடு மக்களாக நிற்பது தான். இது புரிந்தவர்களுக்குப் புரிந்தால் சரி. மீனவர்களுக்காக குரல் கொடுக்கும் இதே சமயத்தில், தொப்புள் கொடி உறவான ஈழத்தமிழர்கள் இலங்கையில் இருந்தாலும், உலகத்தில் எந்த மூலையில் இருந்தாலும் தாய் பாசம் காட்டிய தலைவனை இழந்து தவிக்கிற அவர்களுக்காக குரல் கொடுப்பது நமது கடமை. மீனவர்களின் உயிர் எவ்வளவு முக்கியமோ அந்த அளவுக்கு ஈழத் தமிழர்களின் கனவுகளும் வாழ்க்கையும் ரொம்ப முக்கியம். மீனவர்களின் கஷ்டத்தைப் பார்த்துவிட்டு ஒரு பெரிய கடிதம் எழுதிவிட்டு அதைவிட அமைதியாகப் போவதற்கு நாடகம் ஆடும் திமுக அரசு கிடையாது. மற்ற மீனவர்கள் இந்திய மீனவர்கள் நம்ம மீனவர்கள் தமிழக மீனவர்கள் என்று பிரித்து பேசுவதற்கு நாம் ஒன்றும் பாசிச பாஜக கிடையாது. பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வு காண்பதுதான் நமது முக்கிய அஜந்தா.

நாகையில் உள்ள மண் வளத்தை பாதுகாக்கும் இறால் பண்ணைகளை முறைப்படுத்த வேண்டும். அப்போதுதான் மீனவர்களின் வாழ்வாதாரமும் விவசாயிகளின் வாழ்க்கையும் பாதிக்காமல் இருக்கும். கடலோர கிராமங்களில் மண் அரிப்பிலிருந்து பாதுகாக்கும் அலையாத்திக் காடு அழிப்பதைத் தடுத்து நிறுத்தி, வழி செய்ய வேண்டிய அரசாங்கத்திற்கு இதைவிட முக்கியமான ஒரு வேலை உள்ளது. அது என்னவென்றால் சொந்தக் குடும்பத்தின் வளர்ச்சியும், சொந்த குடும்பத்தின் சுயநலம்தான் அந்த வேலை. இங்கு மக்கள் குடிக்கத் தண்ணீர் இல்லாமல் தவிக்கிறார்கள். அதற்குத் தீர்வாகக் காவிரித் தண்ணீரைக் கொண்டு வரலாம். ஆனால் கொண்டு வந்தார்களா?

பாரம்பரியம் கடல் சார்ந்த ஊரில் ஒரு அரசு மரைன் கல்லூரி (கடல்சார்ந்த படிப்புகளையும் பயிற்சிகளையும் அளிக்கும் இடம்) கொண்டு வரலாம். கொண்டு வந்தார்களா? மீன் சம்பந்தமாக எந்த தொழிற்சாலையும் அமைக்கப்படவில்லை. அனைத்து மக்களுக்கும் வேலை வாய்ப்பு கிடைக்கும் வகையில் தொழில் வாய்ப்பு ஏற்படுத்தினார்களா? ஆனால் ஒவ்வொரு முறையும் வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்று வரும் போது, முதலீடுகள் பற்றி சி.எம். சார் சிரித்துக்கொண்டு பேசுவார். சி.எம். சார் மனச தொட்டு சொல்லுங்க வெளிநாட்டு முதலீடா? வெளிநாட்டில் முதலீடா? ஒட்டுமொத்த தமிழ்நாட்டுக்கு முதலீடா அல்லது குடும்பத்தோட முதலீடு வெளிநாட்டுக்கு போகிறதா. வேளாங்கண்ணி, நாகூர், கோடியக்கரை என இங்கு இருக்கும் சுற்றுலாப் பகுதிகளை மேம்படுத்தலாம். வேதாரண்யம் பகுதியில் உப்பு ஏற்றுமதி செய்வதற்கு வசதி ஏற்படுத்தி செய்யலாம். நாகூர் ஆண்டவர் அரசு ஆஸ்பத்திரியில் பிரசவம் பார்க்கும் டாக்டர் இல்லையாம். நாகை புது பஸ் நிலையத்தை சுத்தமாக வைத்திருக்கிறார்களா? நாகை ரயில் நிலைய வேலையை சீக்கிரமாக முடித்து வைக்கலாம் அதையும் செய்தார்களா? இங்கு ஏற்கனவே இருந்த ஸ்டீல் ரோலிங் ஆலையும், ரெயில் பெட்டி தொழிற்சாலையையும் மூடிவிட்டார்கள். அதை மீண்டும் திறந்தால் வேலைவாய்ப்பு கிடைக்கும் ஏன் அதைப்பற்றி யோசிக்கவில்லை? மேலக்கோட்டை வாசல் தேசிய நெடுஞ்சாலை மேம்பாலம் கட்டி 50 ஆண்டுகள் ஆகிறது. அதை மேம்படுத்தலாம். தஞ்சை நாகை தேசிய நெடுஞ்சாலைப் பணி பல ஆண்டுகளாக நடந்து வருகிறது இன்னும் முடித்த பாடில்லை அதையும் வேகப்படுத்தி முடித்திருக்கலாம் அதையும் செய்யவில்லை. ரொம்ப முக்கியமாக நெல் மூட்டைகள் மழையில் நனைந்து விவசாயிகள் வேதனைப்படுகிறார்கள். அதற்கு சேமிப்புக் கிடங்கு கட்டலாம் ஆனால் கட்டித் தந்தார்களா? தேர்தலுக்கு முன்பு தி.மு.க-காரர்கள் செய்வோம் செய்வோம் என்று சொன்னார்களே செய்தார்களா? இதெல்லாம் எதையும் செய்யாமல், எல்லாத்தையும் செஞ்ச மாதிரியே அதையும் பெருமையாக சொல்வார்கள்.

கடந்த வாரம் திருச்சிக்கும், அரியலூர் மாவட்டத்துக்கும் மக்களை சந்திக்க சென்றிருந்தேன் . பெரம்பலூர் போக வேண்டி இருந்தது ஆனால் சில விதிமுறைகள் இருந்ததால் இந்த பஸ் நகரவில்லை. இந்த நேரத்தில் பெரம்பலூர் பகுதி மக்களிடம் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். விரைவில் நான் உங்களைத் தேடி வருவேன். நமது இந்தப் பிரச்சாரம் அட்டவணை போட்டதற்குப் பிறகு சனிக்கிழமை என்பது குறித்து பேசுகிறார்கள். நான் உங்களை வந்து பார்க்கும் பொழுது உங்களுக்கு எந்த ஒரு இடையூறும் வரக்கூடாது. முக்கியமாக வேலைக்கு எந்தவிதமான தொந்தரவு இருக்கக் கூடாது. இந்தக் காரணத்தினால் தான் வீக் எண்ட்டில் அட்டவணையை ஏற்படுத்தினோம். அரசியலில் சிலருக்கு நாம் ஓய்வு கொடுக்க வேண்டும் அல்லவா. அதனால்தான் ஓய்வு நாட்களைப் பார்த்து நாட்களை தேர்ந்தெடுத்துள்ளோம். சரி, இப்பொழுது மக்களை சந்திப்பதற்கு சொந்தங்களை சந்திப்பதற்கு எத்தனை கட்டுப்பாடுகள்! அங்கு அனுமதியில்லை, இங்கு அனுமதி இல்லை. நான் பேசுவதே குறைந்த நேரம் தான். அதிலும் கட்டுப்பாடு விதித்தால் என்ன செய்வது? அதற்கான காரணங்களைக் கேட்டீர்களா என்றால் சொத்தையாகத்தான் இருக்கும். அரியலூர் போவதற்கு முன்னாடி அந்தப் பகுதியில் மின்தடை, திருச்சியில் போய்ப் பேச ஆரம்பித்தவுடன் ஸ்பீக்கர் ஒயர் துண்டித்தனர்.

நான் தெரியாமல் தான் கேட்கிறேன் சி.எம் சார். எடுத்துக்காட்டாக ஆர்.எஸ்.எஸ். தலைவர், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் ஆகியோர் வந்தால் இந்த மாதிரி கட்டுப்பாடுகள் போடுவீர்களா? நீங்கதான் மறைமுக உறவுக்கு காரர்கள் ஆச்சே. இதுகூட பரவாயில்லை. இதையும் தாண்டி ஒரு விதிமுறை ஒன்று போட்டார்கள். பஸ்ஸுக்குள் இருந்து வெளியே வரக்கூடாது. கையை இவ்வளவுதான் தூக்க வேண்டும். இப்படியேதான் வர வேண்டும். மக்கள் பார்த்து சிரிக்கக் கூடாது. மக்களை பார்த்து கை அசைக்க கூடாது. இப்படி எல்லாம் விதிமுறைகள். நானும் என்னனெவ்வோ நினைத்தேன். செம காமெடியாக இருக்கு. நேரடியாகவே கேட்கிறேன் சி.எம் சார், மிரட்டிப் பார்க்கிறீர்களா? அதற்கு இந்த விஜய் ஆள் இல்லை சார். குறைந்தபட்சம் என்ன செய்துவிடுவீர்கள்? கொள்கையை பெயருக்கு மட்டும் வைத்துக்கொண்டு குடும்பத்தை வைத்து கொள்ளை அடிக்கிற உங்களுக்கு இவ்வளவு இருந்தால். சொந்தமாக உழைத்து சம்பாதித்து இருக்கும் எனக்கு எவ்வளவு இருக்கும்? என்ன நாங்க பெரிதாகக் கேட்டுவிட்டோம்? மக்கள் வந்து நிம்மதியா நின்று பார்ப்பதற்கு ஒரு இடம். அதைத் தேர்வு செய்து அனுமதி கேட்டோம்.

ஆனால் நீங்கள் நெருக்கடியாக இருக்கும் இடமாகத் தேர்வு பண்ணிக் கொடுக்கிறீர்கள். உங்கள் எண்ணம் தான் என்ன? நான் அவர்களைப் பார்க்கக் கூடாது பேசக்கூடாது, குறைகளைக் கேட்கக்கூடாது, குரல் கொடுக்கக்கூடாது என்பது தான் உங்களது எண்ணம். அரசியல் தலைவர் என்பதை மறந்து விடுங்கள். ஒரு சாதாரணமான தமிழ்நாட்டு மண்ணோடு மகனாக, தமிழ் மக்களின் சொந்தக்காரனாக, மக்கள் என் குடும்பத்தை, என் சொந்தங்களைப் பார்க்கப் போனால் என்ன பண்ணுவீர்கள்? அப்போதும் தடை செய்வீர்களா? வேணாம் சார், இந்த அடக்குமுறை அராஜக அரசியல் வேணாம் சார். நான் தனியாள் இல்லை சார். மாபெரும் மக்கள் சக்தியின் பிரதிநிதி சார். மாபெரும் பெண்கள் சக்தியின் சகோதரன் சார். மாபெரும் இளைஞர் இயக்கம் சார்.

2026 இல் இரண்டு பேருக்குத் தான் போட்டி. த.வெ.க, தி.மு.க இடையே தான் போட்டி. இந்த பூச்சாண்டி வேலை காட்டுவதை நிறுத்திவிட்டு தில்லா கெத்தா நேர்மையாக தேர்தலை சந்திக்க வாருங்கள் சார். கொள்கையைப் பேருக்கு மட்டும் வைத்துக் கொண்டு, குடும்பத்தை வைத்துக் கொண்டு தமிழ்நாட்டைக் கொள்ளையடிக்கும் நீங்களா இல்லை. தமிழ்நாட்டில் இருக்கின்ற ஒவ்வொரு வீட்டுக்கும் ஒருவனாக இருக்கிற விஜய்யா என்பதைப் பார்த்து விடலாம். இனிமேல் இந்தத் தடை எல்லாம் போட்டீர்கள் என்றால், நேரடியாக மக்களிடமே அனுமதி கேட்டு விடுவேன். மக்களே நான் உங்களிடம் பேசக்கூடாதா, வரக்கூடாதா, குறைகளைக் கேட்கக் கூடாதா, உங்களுக்காகக் குரல் கொடுக்கக் கூடாதா? நீங்களே சொல்லுங்கள். இவ்வாறு தடையாக போடும் தி.மு.க. அரசு மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டுமா. உங்க நல்லதுக்காக உங்கள் த.வெ.க.க்கு ஆட்சி அமையனுமா. சத்தமாகச் சொல்லுங்கள், கேட்டுச்சா சி.எம். சார். இந்தப் போர் முழக்கம் உங்களை ஒரு நிமிஷம் கூடத் தூங்க விடாது. துரத்திக் கொண்டே இருக்கும். தைரியமாக இருங்கள், நல்லதே நடக்கும். வெற்றி நிச்சயம். மீண்டும் சந்திக்கும் வரை நன்றி என்றார்.



.

Previous Post

தமிழகத்தில் செப். 26 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு!

Next Post

எச்-1பி விசா: புதிய விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே கட்டண உயர்வு

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
எச்-1பி விசா: புதிய விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே கட்டண உயர்வு

எச்-1பி விசா: புதிய விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே கட்டண உயர்வு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In