சென்னையின் மக்கள் தொகை காரணமாக போக்குவரத்து நெரிசல் பெரிதாக இருந்து வந்தது. இந்தப் பிரச்னைக்கு சின்ன ஆசுவாசத்தை கொடுத்திருக்கின்றன மெட்ரோ ரயில்கள்.
சென்னை மெட்ரோ ரயிலில் நாள்தோறும் ஏராளமான பயணிகள் அலுவலகங்களுக்கு, முக்கியப் பணியங்களுக்காக பயணம் செய்து வருகின்றனர்.
இதில் QR code அத்தனை பயணிகளுக்கும் பயன்படுத்துவது இப்போதைய மெட்ரோ தொழில்நுட்பத்திற்கு இயலாத காரியம்.
இதனால் சமீபத்தில் மெட்ரோ ரயிலில் பயணிக்க சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் பயண அட்டையுடன் கூடுதலாக தேசிய பொது போக்குவரத்து அட்டையை (சிங்கார சென்னை அட்டை) சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அறிமுகப்படுத்தியது.
க்யூஆர் சேவை மூலம் டிக்கெட் எடுக்கவும் வசதிகள் செய்யப்பட்டிருந்தது. இதன்மூலம் “QR code’ டிக்கெட்களை பெரும் நெரிசலை தவிர்க்கலாம்.

இந்நிலையில் இன்று காலை முதல் மெட்ரோ ரயிலில் பயணிக்கும் பயணிகள், க்யூஆர் சேவை மூலம் டிக்கெட் எடுக்க முடியாமல் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.