நேற்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் தொலைபேசியில் உரையாடி உள்ளனர்.
இது குறித்து ட்ரம்ப் தனது சமூக வலைதளப் பக்கத்தில், “சீன அதிபர் ஜி உடன் பயனுள்ள போன்காலைப் பேசி முடித்திருக்கிறேன்.
வர்த்தகம், ஃபென்டனில், ரஷ்யா, உக்ரைன் போர் முடிவு, டிக்டாக் ஒப்பந்தத்தின் அனுமதி உள்ளிட்ட மிக முக்கியமான விஷயங்கள் முன்னேற்றம் கண்டுள்ளன.
தென்கொரியாவில் நடக்க உள்ள APEC உச்சி மாநாட்டில் அதிபர் ஜியை சந்திப்பதற்கு சம்மதம் தெரிவித்துள்ளேன்.
அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் நான் சீனா செல்ல உள்ளேன். அதே மாதிரி, அதிபர் ஜியும் உரிய நேரத்தில் அமெரிக்கா வருவார். போன்கால் மிக நன்றாகச் சென்றது.
நாங்கள் மீண்டும் போன்காலில் உரையாடுவோம். டிக்டாக் ஒப்புதலுக்கு நன்றி, நாங்கள் இருவரும் APEC உச்சி மாநாட்டில் சந்தித்துக்கொள்ள ஆவலாக இருக்கிறோம்” என்று பதிவிட்டுள்ளார்.
