Last Updated:
அத்துமீறிய பாகிஸ்தானுக்கு ஆபரேஷன் சிந்தூர் மூலமாக நாம் தக்க பதிலடி கொடுத்துள்ளோம்.
நூற்றாண்டுகள் நினைவு கூறும் சாதனைகளை பிரதமர் மோடி 11 ஆண்டுகளில் செய்து முடித்திருப்பதாக நெட்வொர்க் 18க்கு அளித்த பிரத்யேக பேட்டியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
நெட்வொர்க் 18 குழுமத்தின் தலைமை ஆசிரியர் ராகுல் ஜோஷிக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது-
ஜனநாயகத்தை பலவீனப்படுத்தும் நடவடிக்கைகளில் எதிர்க்கட்சிகள் ஈடுபடுகின்றன. அத்தகையவர்களை பொதுமக்கள் தேர்தலில் தண்டிக்க வேண்டும். பிரதமர் மோடிக்கு எதிராக எந்தப் புகாரையும் கூற முடியாததால் அவரது மறைந்த தாயாருக்கு எதிராக இழிவான சொற்களை எதிர்க்கட்சியினர் பயன்படுத்துகின்றனர். நிச்சயமாக அவர்களுக்கு பொதுமக்கள் பாடம் புகட்டுவார்கள்.
பிரதமர் மோடி கடந்த 11 ஆண்டுகளில் செய்த சாதனைகள் நூற்றாண்டுகளாக நினைவு கூறப்படும். அவ்வளவு சாதனைகளை பிரதமர் மோடி தனது ஆட்சி காலத்தில் ஏற்படுத்தியுள்ளார். ஜி.எஸ்.டி வரி சீரமைக்கப்பட்டுள்ளது. 16 வரிகளை ஒன்றிணைத்து இந்த ஜி.எஸ்.டி வரி உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் முதலீடு அதிகரிப்பதுடன் சந்தைகளுக்கு ஏராளமான பலன்கள் கிடைக்கும்.
கடந்த 80 ஆண்டுகளில் இப்படி ஒரு வரி சீர்திருத்தம் ஏற்படுத்தப்படவில்லை. பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் இந்தியா இன்றைக்கு உலக அளவில் மதிப்பையும் கண்ணியத்தையும் பெற்றுள்ளது.
உலக நாடுகளின் தலைவர்களுடன் நல்ல நட்புறவை பிரதமர் மோடி ஏற்படுத்தி வருகிறார். அவருடைய தனிப்பட்ட செல்வாக்கு இந்திய மக்களுக்கு பலன் அளிக்கிறது. அத்துமீறிய பாகிஸ்தானுக்கு ஆபரேஷன் சிந்துர் மூலமாக நாம் தக்க பதிலடி கொடுத்துள்ளோம்.,
September 19, 2025 10:41 PM IST
Exclusive : ‘நூற்றாண்டுகள் நினைவுகூறும் சாதனைகளை 11 ஆண்டுகளில் செய்துள்ளார்’ – பிரதமருக்கு அமித் ஷா பாராட்டு

