எடப்பாடி தலைமையிலான கூட்டணியில் இருக்க முடியாது
இதையடுத்து, சென்னை செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய டிடிவி தினகரன்,
“பாஜகவில் எப்போது அண்ணாமலை மாநில தலைவர் பதவியிலிருந்து வெளியேறி, நயினார் நாகேந்திரன் பதவியேற்றாரோ அப்போதே கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுவிட்டது.
எங்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லாமல் NDA கூட்டணியின் தலைவராக சரியான நபரைத் தேர்ந்தெடுப்போம் என்று நயினார் கூறினார்.
ஆனால், எடப்பாடி தலைமையிலான கூட்டணி அமைக்கிறது என்றவுடனே, NDA கூட்டணியிலிருந்து விலக முடிவெடுத்துவிட்டோம்.”

மாற்றம் வரும் என்று கொஞ்ச நாட்கள் காத்திருந்து பார்த்தோம். எந்த மாற்றமும் இல்லாததால், மூன்று மாதங்களுக்கு முன்பே NDA கூட்டணியிலிருந்து விலகிவிட்டோம். அதை பொதுவெளியில் தாமதமாகக் கூறினோம்.
என்னை டெல்லிக்கு அழைத்து சமரசம் பேச முயற்சி செய்தனர்.
இதுதவிர வேறெந்த காரணமுமில்லை, தூண்டுதலுமில்லை. என்னை டெல்லிக்கு அழைத்து சமரசம் பேச முயற்சி செய்தனர்.
நானும், அண்ணாமலையும் டெல்லிக்குச் செல்வதாக இருந்தது. எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராகவும், கூட்டணி தலைவராகவும் ஏற்க முடியாது என்பதுதான் NDA கூட்டணியிலிருந்து வெளியேறக் காரணம்” என்று உடைத்துப் பேசியிருக்கிறார்.
மேலும், “டிசம்பர் மாதம் நல்ல செய்தி வரும்” என்று சஸ்பென்ஸ் வைத்துப் பேசியிருக்கிறார்.
