Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

“வாக்கு திருட்டில் ஈடுபட்டவர்களை தலைமை தேர்தல் ஆணையர் பாதுகாக்கிறார்” – ராகுல் காந்தி பகிரங்க குற்றச்சாட்டு | இந்தியா

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 19, 2025
in அரசியல் செய்திகள்
0
“வாக்கு திருட்டில் ஈடுபட்டவர்களை தலைமை தேர்தல் ஆணையர் பாதுகாக்கிறார்” – ராகுல் காந்தி பகிரங்க குற்றச்சாட்டு | இந்தியா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:September 18, 2025 1:09 PM IST

Rahul Gandhi | கர்நாடகாவில் காங்கிரஸ் வென்ற தொகுதிகளை குறிவைத்து வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் திட்டமிட்டு முறைகேடாக நீக்கப்பட்டதாகவும் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

Rapid Read
ராகுல் காந்தி ராகுல் காந்தி
ராகுல் காந்தி

இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், இந்திய ஜனநாயகத்தை அழிப்பவர்களைப் பாதுகாக்கிறார் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, வாக்காளர் பட்டியலில் நடக்கும் மோசடிகள் குறித்துப் பல ஆதாரங்களை முன்வைத்து, தேர்தல் ஆணையத்தின் மீது சரமாரியான குற்றச்சாட்டுகளை வைத்தார்.

“தமிழக மக்களுக்கே தெரியாமல் டெல்லியில் அமர்ந்துள்ள ஒருவர், தமிழ்நாட்டில் உள்ள வாக்காளர்களின் வாக்குகளை அழிக்கிறார்” என்று ராகுல் காந்தி குற்றம்சாட்டினார். ஒவ்வொரு தேர்தலிலும் லட்சக்கணக்கான வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படுவதாகவும், குறிப்பாக எதிர்க்கட்சிகளுக்கு வாக்களிப்பவர்கள் மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் குறிவைக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.

கர்நாடகாவில் காங்கிரஸ் வென்ற தொகுதிகளை குறிவைத்து வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் திட்டமிட்டு முறைகேடாக நீக்கப்பட்டதாகவும் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். குறிப்பாக கர்நாடகாவின் ஆலந்த் தொகுதியில் 6,018 வாக்காளர்களின் பெயர்களை நீக்க முயற்சி நடைபெற்றுள்ளது. இந்த மோசடியில் பூத் கமிட்டி உறுப்பினர்களுக்கே தெரியாமல் ஒரு கும்பல் ஈடுபட்டுள்ளது. மகாராஷ்டிராவின் ரஜுரா தொகுதியில் 6,850 போலி வாக்காளர்கள் இதே முறையில் இணைக்கப்பட்டுள்ளனர்.

தேர்தலை திருட யாரோ சிலர் மையப்படுத்தப்பட்ட கிரிமினல் நடைமுறையை ஏற்படுத்தி வைத்துள்ளனர் என்றவர், வெடிகுண்டை நான் இன்னும் வெளியிடவில்லை, இனிமேல்தான் ஹைட்ரஜன் வெடிகுண்டு வரப்போகிறது எனவும் எச்சரித்தார்.

தமிழ்நாடு, ஆந்திரா உட்படப் பல மாநிலங்களில் உள்ள வாக்காளர்களின் பெயர்களை நீக்க விண்ணப்பங்கள் அளிக்கப்பட்டுள்ளன. ‘கோதாபாய்’ என்ற பெயரில் போலியாக ஒரு கணக்கு உருவாக்கப்பட்டு, 12 வாக்காளர்களின் பெயர்களை நீக்க விண்ணப்பித்துள்ளனர்.

கோதாபாய் என்பவர், தனது பெயரில் விண்ணப்பம் அளித்தது தனக்குத் தெரியாது என ஊடகங்களிடம் கூறியதை, ராகுல் காந்தி செய்தியாளர் சந்திப்பில் நேரில் சுட்டிக்காட்டினார்.

“நீங்கள் அரசியலமைப்பையும், ஜனநாயகத்தையும் பாதுகாக்கவில்லை என்று மக்கள் நம்புவார்கள். தேர்தல் ஆணையம் திட்டமிட்டே வாக்குத் திருட்டில் ஈடுபட்டுள்ளது. இதை நான் ஆதாரபூர்வமாக நிரூபித்துள்ளேன். இனி இந்த நாட்டு மக்கள், குறிப்பாக இளைஞர்கள் தான் முடிவு செய்ய வேண்டும். அவர்கள்தான் தேர்தல் ஆணையத்தைக் கேள்வி கேட்க வேண்டும்” என்று ராகுல் காந்தி அழைப்பு விடுத்தார்.

முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
Location :

Delhi,Delhi,Delhi

First Published :

September 18, 2025 1:09 PM IST

தமிழ் செய்திகள்/இந்தியா/

“வாக்கு திருட்டில் ஈடுபட்டவர்களை தலைமை தேர்தல் ஆணையர் பாதுகாக்கிறார்” – ராகுல் காந்தி பகிரங்க குற்றச்சாட்டு



.

Previous Post

ஜூவி செய்தி எதிரொலி : பழங்குடி மக்களுக்கு வீடு கட்டும் ஆணை வெளியிட்டது பழங்குடி நல ஆணையம்.

Next Post

அதானி நிறுவன வழக்கு: ஊடகங்களை வாயடைக்கச் சொல்லும் நீதிமன்றமும் அமைச்சகமும்! ஜனநாயகத்திற்கான சவாலா?

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
அதானி நிறுவன வழக்கு: ஊடகங்களை வாயடைக்கச் சொல்லும் நீதிமன்றமும் அமைச்சகமும்! ஜனநாயகத்திற்கான சவாலா?

அதானி நிறுவன வழக்கு: ஊடகங்களை வாயடைக்கச் சொல்லும் நீதிமன்றமும் அமைச்சகமும்! ஜனநாயகத்திற்கான சவாலா?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In