Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

டெபாசிட் செய்ததோ ரூ.500; திரும்ப எடுத்ததோ ரூ.5 கோடி…! எப்படி நடந்தது இந்த மோசடி…? | இந்தியா

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 18, 2025
in அரசியல் செய்திகள்
0
டெபாசிட் செய்ததோ ரூ.500; திரும்ப எடுத்ததோ ரூ.5 கோடி…! எப்படி நடந்தது இந்த மோசடி…? | இந்தியா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:September 17, 2025 7:48 PM IST

உத்தரப்பிரதேச மாநிலத்தில், வெறும் 500 ரூபாய் முதலீட்டில் தொடங்கிய நபர், குறுகிய காலத்தில் ரூ.5 கோடி வரை குவித்ததாகக் கூறப்பட்டபோது, ​​அவரது வீட்டின் அருகில் வசிப்போர் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.

Rapid Read
News18News18
News18

உத்தரப்பிரதேச மாநிலம் ஹாத்ராஸைச் சேர்ந்த 23 வயது இளைஞர் ஒருவர், ஒரு வங்கியில் நான்கே மாதங்களில் ரூ.5 கோடி வரை மோசடி செய்ததாகக் கூறப்படும் நிலையில், அவர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஆகாஷ் என்ற அந்த இளைஞர், தனது தந்தையின் மரணத்தைத் தொடர்ந்து தனது வீட்டுப் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். ‘மா சாமுண்டா ஸ்வீட் அண்ட் நம்கீன்’ என்ற சிறிய உணவகத்தை நடத்திவரும் அவர், கச்சோரிகளை விற்பனை செய்துவந்தார்.

வெறும் 500 ரூபாய் முதலீட்டில் தொடங்கிய ஆகாஷ், குறுகிய காலத்தில் ரூ.5 கோடி வரை குவித்ததாகக் கூறப்பட்டபோது, ​​அவரது வீட்டின் அருகில் வசிப்போர் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். இதில் கிடைத்த லாபத்தில் ரூ.2.5 லட்சம் மதிப்புள்ள யமஹா R15 பைக்கை வாங்கியதாகவும், தார் காரை முன்பதிவு செய்ததாகவும், சுமார் ரூ.3.5 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை அவர் வாங்கியதாகவும் கூறப்படுகிறது. இப்படி இவ்வளவு குறுகிய நாட்களில் இவ்வளவு பணம் சம்பாதிக்க முடிந்தது என்று அக்கம்பக்கத்தினர் கேள்வி எழுப்பத் தொடங்கினர். இந்த சந்தேகம் இறுதியில் உள்ளூர் அதிகாரிகளை சென்றடைந்தது.

இந்த மோசடி குறித்த தகவல் கிடைத்ததும், ஹாத்ராஸ் போலீசார் இதை விசாரிக்க சிறப்பு செயல்பாட்டுக் குழுவை (SOG) அமைத்தனர். பேங்க் ஆஃப் இந்தியாவில் ஆகாஷ் திறந்திருந்த சேமிப்புக் கணக்கில் அவரது நிதி பரிவர்த்தனைகளை இக்குழு விரைவாகக் கண்டறிந்தது. வங்கியில் கிடைத்த தகவல்கள் புலனாய்வாளர்களை அதிர்ச்சியடையச் செய்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர். ஆகாஷ் உடனடியாக காவலில் எடுக்கப்பட்டு தற்போது விசாரிக்கப்பட்டு வருகிறார். அவரது வாக்குமூலங்களின் விவரங்களை அதிகாரிகள் இதுவரை வெளியிடவில்லை.

முதற்கட்ட விசாரணையில், ஆகாஷ் ஓவர் டிராஃப்ட் வசதியைப் பயன்படுத்தி மிகப்பெரிய தொகையை ஈட்டியதாகத் தெரிகிறது. மே 2025-ல், அவர் ஹெச்டிஎஃப்சி வங்கியில் ரூ.500 ஆரம்ப வைப்புத் தொகையுடன் ஒரு சேமிப்புக் கணக்கை தொடங்கியதாகக் கூறப்படுகிறது. சில நாட்களுக்குள், ஓவர் டிராஃப்ட் மூலம் ரூ.5,000 எடுத்துள்ளார். காலப்போக்கில், அவர் பல டெபாசிட்களை செய்துள்ளார். நாட்கள் செல்ல செல்ல ஓவர் டிராஃப்ட் வரம்பை அதிகரித்தார்.

இறுதியில் அதற்கு சமமான தொகையை டெபாசிட் செய்யாமல் ரூ.50 லட்சத்தை வங்கியிலிருந்து பெற்றுள்ளார். இதுபோன்ற ஒன்பது பரிவர்த்தனைகளை நடத்தியதன் மூலம், ஆகாஷ் மொத்தம் ரூ.5 கோடியை மோசடி செய்ததாகக் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: 50 கிலோ தங்கம்.. ரூ. 8 கோடியை கொள்ளையடித்த கும்பல்! SBI வங்கிக்கு ராணுவ உடையில் வந்தவர்கள் யார்? போலீஸ் தீவிர விசாரணை

இந்தப் பரிவர்த்தனைகள் மூலம் பெறப்பட்ட நிதி, ஆன்லைன் முதலீட்டு தரகு செயலி மூலம் பங்குச் சந்தையில் முதலீடு செய்யப்பட்டதாகவும், சுமார் ரூ.3.5 கோடி பங்குகளுக்கு ஒதுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையில், ஆகாஷுடன் சேர்ந்து மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் மூன்று வங்கி ஊழியர்களும் விசாரணையில் இருப்பதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த வழக்கில் யாரெல்லாம் உடந்தையாக இருந்தார்கள் என்பதைக் கண்டறிய அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

September 17, 2025 7:48 PM IST



.

Previous Post

“தொடர்ந்து ஆட்சியமைத்தோம் என்ற வரலாற்றைப் படைக்க வேண்டும்!” – திமுக முப்பெரும் விழாவில் ஸ்டாலின் இலக்கு | stalin set goal about continuous won assembly election in 2026 election

Next Post

Uddhav Thackeray – Raj Thackeray: “ராஜ் தாக்கரேயுடனான கூட்டணி குறித்து விரைவில் அறிவிப்பேன்” – கூறும் உத்தவ் | “I will announce soon about alliance with Raj Thackeray” – says Uddhav

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
Uddhav Thackeray – Raj Thackeray: “ராஜ் தாக்கரேயுடனான கூட்டணி குறித்து விரைவில் அறிவிப்பேன்” – கூறும் உத்தவ் | “I will announce soon about alliance with Raj Thackeray” – says Uddhav

Uddhav Thackeray - Raj Thackeray: "ராஜ் தாக்கரேயுடனான கூட்டணி குறித்து விரைவில் அறிவிப்பேன்" - கூறும் உத்தவ் | "I will announce soon about alliance with Raj Thackeray" - says Uddhav

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In