இளம் வயதில் களமிறங்கி சாதனை!
18 ஆண்டுகள், 33 நாள்கள் ஆன நிலையில் ரியல் மாட்ரிட் அணிக்காக சாம்பியன்ஸ் லீக்கில் களமிறங்கி ஃபிராங்கோ மாஸ்டன்டுவோனோ சாதனை படைத்துள்ளார்.
இதற்கு முன்பாக 18 ஆண்டுகள், 73 நாள்களில் ரியல் மாட்ரிட் அணிக்காக பிரேசில் நாட்டின் என்ட்ரிக் களமிறங்கியது தற்போது முறியடிக்கப்பட்டுள்ளது.
சாம்பியன்ஸ் லீக்கின் முதல் போட்டியில் ரியல் மாட்ரிட் அணி 2-1 என வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் கிளியன் எம்பாப்வே 28, 81ஆவது நிமிஷங்களில் கிடைத்த பெனால்டியில் தவறாமல் கோல் அடித்து வெற்றிக்கு வித்திட்டார்.
