Last Updated:
முதலில் குஜராத்தை ஒரு பொருளாதார வலிமை கொண்ட மாநிலமாக மாற்றினார். இப்போது, அவர் ஒட்டுமொத்த இந்தியாவையும் ஒரு உலக வல்லரசாக மாற்றிக் கொண்டிருக்கிறார்.
பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது 75 ஆவது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவருக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்த நிலையில் ரிலையன்ஸ் சேர்மன் முகேஷ் அம்பானி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக முகேஷ் அம்பானி வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது-
இன்று 145 கோடி இந்தியர்களுக்கு ஒரு கொண்டாட்டமான நாள். இது நம் மிகவும் மதிக்கப்படும் மற்றும் அன்புக்குரிய பிரதமர், ஸ்ரீ நரேந்திர பாய் மோடி அவர்களின் 75-வது பிறந்தநாள்.
அவர் முதலில் குஜராத்தை ஒரு பொருளாதார வலிமை கொண்ட மாநிலமாக மாற்றினார். இப்போது, அவர் ஒட்டுமொத்த இந்தியாவையும் ஒரு உலக வல்லரசாக மாற்றிக் கொண்டிருக்கிறார்.
நமது பிரதமருக்கு மகிழ்ச்சியான பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவிப்பதிலும், அவர் தொடர்ந்து நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும் எனப் பிரார்த்திப்பதிலும் நானும் எனது 145 கோடி இந்திய சகோதர சகோதரிகளுடன் இணைந்து கொள்கிறேன்.
நமது தாய்நாட்டை உலகின் சிறந்த தேசமாக வழிநடத்த, எல்லாம் வல்ல இறைவன் மோடிஜியை ஒரு அவதார புருஷராக அனுப்பியுள்ளார். அவரை மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக நெருக்கமாக அறிந்திருப்பது எனது நல்ல அதிர்ஷ்டம். இந்தியா மற்றும் இந்தியர்களின் சிறந்த எதிர்காலத்திற்காக இவ்வளவு அயராது உழைத்த ஒரு தலைவரை நான் பார்த்ததே இல்லை. என்று முகேஷ் அம்பானி குறிப்பிட்டுள்ளார்.
September 17, 2025 5:11 PM IST
‘145 கோடி இந்தியர்களுக்கு கொண்டாட்டமான நாள்..’ – பிரதமர் மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த முகேஷ் அம்பானி

