ஓ.பன்னீர்செல்வம், “பிரிந்து கிடக்கும் அதிமுக சக்திகள் ஒன்றிணைய வேண்டுமென பேரறிஞர் அண்ணா பிறந்தநாளில் சபதம் ஏற்போம். தலைவர்கள் இணையவில்லை என்றால் தொண்டர்கள் இணைந்து அதிமுகவைக் காப்பாற்றுவார்கள்” என்று கூறியிருந்தார்.
இதைத்தொடர்ந்து தற்போது வி.கே. சசிகலா, “நிராகரிப்பு, பிரிவது எல்லாம் ரொம்ப ஈஸியான வேலை. ஒன்றினைவதுதான் ரொம்பவும் சிரமமானது. எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு அனைவரையும் ஒன்றிணைத்தே நான் பழக்கப்பட்டுவிட்டேன்.
அதிமுக ஒன்றிணைந்தால்தான் வெற்றி என்பதுதான் எல்லோரின் எண்ணமும். அதைத்தான் நாங்கள் வெளிப்படுத்துகிறோம்.
இன்றைக்கு அண்ணா பிறந்த நாள். ‘நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும், இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும்’ என அண்ணா சொன்னதுபோல “மறப்போம் மன்னிப்போம்’ என அதிமுக தலைவர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்” என்று பேசியிருக்கிறார்.
