Last Updated:
மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிவித்தபடி, இந்த ரயில் செப்டம்பர் 2025-இல் அதாவது இந்தமாத இறுதிக்குள் அறிமுகப்படுத்தப்பட உள்ளது
வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் குறித்து தற்போது வெளிவந்துள்ள வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்தியாவில் தற்போது அதிவேகத்தில் செல்லும் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இவை மணிக்கு அதிகபட்சம் 130 கிலோ மீட்டர் வேகம் வரை செல்கின்றன.
தற்போது வரை வந்தே பாரத் ரயிலில் அமர்ந்து கொண்டு செல்லும் வகையில் மட்டுமே வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அந்த வகையில் தற்போது இயங்கும் வந்தே பாரத் ரயில்கள் பகல் நேரத்தில் பயண தூரத்தை கடக்கின்றன.
இந்நிலையில் அடுத்த கட்டமாக வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்கள் இயக்கப்படவுள்ளது. ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஜூலை 25, 2025 அன்று ராஜ்யசபாவில் பேசும்போது, வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலின் முதல் முன்மாதிரி (prototype) ஏற்கனவே தயாராகி, அனைத்து சோதனைகளும் நிறைவடைந்துவிட்டதாகத் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் குறித்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
Another feather in Indian Railways cap !!
Introducing Vande Bharat Sleeper Version.Made in Bharat, Made by Bharat, Made for Bharat 🇮🇳 pic.twitter.com/DsnWVHEoZh
— Yo Yo Funny Singh (@moronhumor) September 1, 2024
மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிவித்தபடி, இந்த ரயில் செப்டம்பர் 2025-இல் அதாவது இந்தமாத இறுதிக்குள் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. தகவல்களின்படி, இந்த ரயில் டெல்லியையும் பாட்னாவையும் இணைக்கும். எனினும், டெல்லி-தர்பங்கா அல்லது டெல்லி-சீதாமர்ஹி ஆகிய வழித்தடங்களில் ஏதேனும் ஒன்றில் இது இயக்கப்படலாம். இருப்பினும் சரியான வழித்தடம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
இந்த ரயில் டெல்லி-பாட்னா இடையேயான பயணத்தை வெறும் 11 மணி நேரத்தில் நிறைவு கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது, ராஜதானி எக்ஸ்பிரஸ் ரயில் இந்தத் தொலைவை கடக்க 23 மணி நேரத்திற்கும் மேல் எடுத்துக் கொள்கிறது.
September 14, 2025 4:03 PM IST


