Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

IND Vs PAK; டிவியை கிரிக்கெட் பேட்டால் உடைத்த சிவசேனா தலைவர்! கிரிக்கெட் வீரர்கள் தேசபக்தர்களா எனவும் கேள்வி | இந்தியா

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 14, 2025
in அரசியல் செய்திகள்
0
IND Vs PAK; டிவியை கிரிக்கெட் பேட்டால் உடைத்த சிவசேனா தலைவர்! கிரிக்கெட் வீரர்கள் தேசபக்தர்களா எனவும் கேள்வி | இந்தியா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:September 14, 2025 4:38 PM IST

ஆசியக் கோப்பை இந்தியா பாகிஸ்தான் போட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து சிவசேனா ஆனந்த் துபே டிவியை பேட்டால் உடைத்து கண்டனம் தெரிவித்துள்ளார்.

News18News18
News18

இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ஆசியக் கோப்பைத் தொடரின் 17ஆவது சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் ஐக்கிய அரபு அமீரகத்துடன் மோதி வெற்றி பெற்ற நிலையில், 2ஆவது போட்டியில் பாகிஸ்தானுடன் இன்று மோத உள்ளது. இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு போட்டி நடைபெற உள்ளது.

பொதுவாக இந்தியா – பாகிஸ்தான் அணி விளையாடும் போட்டி பெரிய அளவில் கவனிக்கப்படும். இந்நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல், அதனைத் தொடர்ந்து மே மாதம் இந்திய ராணுவம் பாகிஸ்தானில் இருந்த தீவிரவாத நிலைகள் மீது நடத்திய ஆபரேஷன் சிந்தூர் ஆகியவற்றைத் தொடர்ந்து இன்று நடக்கும் இந்தப் போட்டி மேலும் கவனம் பெற்றுள்ளது. குறிப்பாக இந்தப் போட்டிக்கு மகாராஷ்டிராவின் உத்தவ் தாக்கரேவின் சிவசேனா கட்சியினர் டிவியை உடைத்து இந்தப் போட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

உத்தவ் தாக்கரேவின் சிவசேனா கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஆனந்த் துபே, ”இது இந்தியாவின் உணர்வுக்கு அவமதிப்பு” எனக் கூறி இந்தியா – பாகிஸ்தான் போட்டியை ஒளிபரப்பக் கூடாது என டிவியை கிரிக்கெட் பேட்டால் உடைத்தார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.

போட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து டிவியை உடைத்த ஆனந்த் துபே பின்னர் இது குறித்து பேசியபோது, “இந்தப் போட்டியைப் பார்க்க நாங்கள் விரும்பவில்லை. இதன் ஒளிபரப்பைத் தடை செய்ய வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். பாகிஸ்தான் ஒரு பயங்கரவாத நாடு, அதைப் புறக்கணிக்க வேண்டும். 140 கோடி இந்தியர்களின் உணர்வுகளுடன் விளையாட யாருக்கும் உரிமை இல்லை என்பதை பிசிசிஐ மற்றும் ஐசிசி உணர வேண்டும் என்பதற்காகவே இதனை செய்கிறோம்.

இந்திய கிரிக்கெட் வீரர்கள் உண்மையான தேசபக்தர்களாக இருந்தால், கடைசி நேரத்திலும் போட்டியைப் புறக்கணிக்கவும். தனி விமானம் மூலம் இந்தியாவுக்கு திரும்புங்கள்; நாங்கள் உங்களை எங்கள் தோள்களில் சுமந்து வரவேற்கிறோம். ஆனால் நீங்கள் விளையாடினால், நாங்கள் உங்களைப் புறக்கணித்து விமர்சிப்போம். காரணம், தேசத்தை விட எதுவும் பெரியதல்ல” எனத் தெரிவித்தார்.

இதேபோல், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது; “பிசிசிஐ தேச விரோதமாக மாறி வருகிறது. பாகிஸ்தானுடன் விளையாடுவதில் ஏன் இவ்வளவு உற்சாகமாக இருக்கிறது? இந்தியாவில் நடைபெறும் ஆசியக் கோப்பையை பாகிஸ்தானால் புறக்கணிக்க முடியும் என்றால், பிசிசிஐயால் ஏன் அதைச் செய்ய முடியாது? இரத்தமும் தண்ணீரும் ஒன்றாகப் பாய முடியாது என்றால், கிரிக்கெட்டும் இரத்தமும் மட்டும் எப்படி ஒன்றாக இருக்க முடியும்?” எனத் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

September 14, 2025 4:18 PM IST

தமிழ் செய்திகள்/இந்தியா/

IND Vs PAK; டிவியை கிரிக்கெட் பேட்டால் உடைத்த சிவசேனா தலைவர்! கிரிக்கெட் வீரர்கள் தேசபக்தர்களா எனவும் கேள்வி



.

Previous Post

‘கோவையில் வர்த்தக கூட்டம் நடத்திய வ.உ.சி.துறைமுக ஆணையம்’ பங்குதாரர்களுக்கு கிடைக்கும் பயன் என்ன?

Next Post

ஆசிய கோப்பை: இந்தியா முதலில் பந்துவீச்சு!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
ஆசிய கோப்பை: இந்தியா முதலில் பந்துவீச்சு!

ஆசிய கோப்பை: இந்தியா முதலில் பந்துவீச்சு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In