Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

தண்ணீரில் மிதந்த சடலம்.. அருகே சென்று பார்த்த போலீசாருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி – வைரல் வீடியோ | இந்தியா

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 14, 2025
in அரசியல் செய்திகள்
0
தண்ணீரில் மிதந்த சடலம்.. அருகே சென்று பார்த்த போலீசாருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி – வைரல் வீடியோ | இந்தியா
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:September 13, 2025 5:51 PM IST

வீர்பூர் அணையில் Instagram Reelக்காக இறந்தவர் போல நடித்த இளைஞன் போலீசாரையும் மக்களையும் குழப்பம் ஏற்படுத்தினார் வீடியோ வைரலாக சமூக ஊடகங்களில் விவாதம் எழுந்தது.

வைரலாகும் வீடியோவைரலாகும் வீடியோ
வைரலாகும் வீடியோ

மத்தியப் பிரதேசத்தின் குவாலியரில் நடந்த ஒரு வினோதமான சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது, அங்கு வீர்பூர் அணையின் தண்ணீரில் ஒருவர், இறந்து கரையை அடைந்தது போல் கிடந்தார். அப்போது, அந்த வழியாகச் சென்றவர்கள் அவரை ஒரு இறந்த உடல் என்று நினைத்து உடனடியாக காவல்துறையினருக்குத் தகவல் அளித்தனர். ஆனால், போலீசார் சம்பவ இடத்தை அடைந்தவுடன், இறந்தவர் போல நடித்த அந்த இளைஞன் திடீரென ஓடத் தொடங்கினார். இதைப் பார்த்த காவல்துறையினரும் திகைத்துப் போனார்கள்.

வீர்பூர் அணையில் தண்ணீரில் மிதந்த ஒருவரைப் பார்த்த உள்ளூர்வாசிகள், அவர் நீரில் மூழ்கி இறந்துவிட்டதாக நினைத்து பீதியடைந்தனர். அவர்கள் உடனடியாக போலீசாருக்குத் தகவல் கொடுத்தனர். இதனையடுத்து கிர்வாய் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, அணையின் அருகே ஒரு இளைஞனின் உடல் முழுவதும் தண்ணீரில் மூழ்கி இருப்பதையும், அவரது முகம் மட்டுமே வெளியே தெரிந்ததையும் கண்டனர்.

உடலை மீட்க சம்பவ இடத்திற்கு ஒரு போலீஸ் குழு சென்றது. போலீசார் அந்த இளைஞனை வெளியே எடுக்க முன்னோக்கி நகர்ந்தவுடன், இறந்துவிட்டதாக கருதப்பட்ட அந்த நபர், திடீரென எழுந்து ஓடத் தொடங்கினார். இந்தக் காட்சி அங்கு கூடியிருந்த மக்களை பிரமிப்பில் ஆழ்த்தியது மட்டுமல்லாமல் போலீசாரும் அதிர்ச்சியடைந்தனர். அந்த நபர் ஒரு இன்ஸ்டாகிராம் ரீலுக்காக இந்த செயலை செய்தது பின்னர் தெரிய வந்தது.

சமூக ஊடகங்களில் ஒரு ரீல் செய்யும் வெறி காரணமாக, அந்த இளைஞன் வீர்பூர் அணையில், 20 நிமிடங்கள் தண்ணீரில் இறந்த உடல் போல படுத்துக் கொண்டு ஒரு வீடியோவை படம்பிடித்தான். இந்த சம்பவம் அவசரகால சேவைகளை தவறாகப் பயன்படுத்துவதன் மூலம் அதிகாரிகளின் நேரத்தை வீணடித்தது மட்டுமல்லாமல், உள்ளூர் மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியதாகவும் அந்த நபரின் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதுபோன்ற ஆபத்தான நடவடிக்கைகளுக்கு எதிராக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், வேண்டுமென்றே குழப்பத்தை ஏற்படுத்துபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Reel का जुनून, वीरपुर बांध में 20 मिनट बिना हिले तैरता रहा युवक


पुलिस के पहुंचते ही दौड़ लगाकर भागा, 30 वर्षीय युवक आरोन का निवासी है, पुलिस ने डांटकर – समझाकर छोड़ा#Gwalior #Reels pic.twitter.com/ouXIWpHWUu

— MP Breaking News (@mpbreakingnews) September 8, 2025

இந்த வீடியோ சமூக ஊடகங்களில் பதிவிடப்பட்டதும் வேகமாக வைரலாகியதை அடுத்து நெட்டிசன்கள் கலவையான எதிர்வினைகளை தெரிவித்து வருகின்றனர். அதில் ஒரு யூசர், இன்ஸ்டாகிராம் ரீல் உயிரை விட முக்கியமானதாகிவிட்டது, என்று கூறியுள்ளார், மற்றொரு யூசர், இது அடுத்த நிலை நீச்சல் திறன், என்று கருத்து தெரிவித்தார்.

மூன்றாவது யூசர், அசுத்தமான நீரில் ஏன் இப்படி ஒரு செயல்? ஒருவேளை குடும்பப் பிரச்சனையாக இருக்குமோ, என்று தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் சமூக ஊடகங்கள் எவ்வாறு தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன என்பது குறித்த விவாதத்தைத் தூண்டியுள்ளது, மேலும் பொது சேவைகளின் தவறான பயன்பாடு குறித்து கவலைகளை எழுப்பியுள்ளது.

முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

September 13, 2025 5:51 PM IST

தமிழ் செய்திகள்/இந்தியா/

தண்ணீரில் மிதந்த சடலம்.. அருகே சென்று பார்த்த போலீசாருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி – வைரல் வீடியோ



.

Previous Post

“சொன்னதெல்லாம் செஞ்சீங்களா சார்?'' – திமுக தேர்தல் வாக்குறுதியை லிஸ்ட் போட்டு கேள்வி கேட்ட விஜய்

Next Post

TVK Vijay Campaign: சொன்னீர்களே செய்தீர்களா? ஜெயலலிதா பாணியில் தவெக தலைவர் விஜய் பரப்புரை

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
TVK Vijay Campaign: சொன்னீர்களே செய்தீர்களா? ஜெயலலிதா பாணியில் தவெக தலைவர் விஜய் பரப்புரை

TVK Vijay Campaign: சொன்னீர்களே செய்தீர்களா? ஜெயலலிதா பாணியில் தவெக தலைவர் விஜய் பரப்புரை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In