Last Updated:
நல்கொண்டா மாவட்டம், நகிரேகல் நகரத்தைச் சேர்ந்த பிரம்மதேவர நரேஷ், கர்ணதி நரேஷ், விக்ரம் ‘லிட்டில் சோல்ஜர் பவுண்டேஷன்’ மூலம் பக்ரிதி யாத்ரா, பசுமை சவால் இயக்கம் நடத்துகின்றனர்.
உலகம் முழுவதும் காலநிலை மாற்றம் தொடர்ந்து கவலையளிக்கும் விதமாக உள்ள இந்த காலகட்டத்தில், தெலுங்கானாவின் நல்கொண்டா மாவட்டத்தைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள், இயற்கையை மீட்க எளிய ஆனால் சக்திவாய்ந்த வழியைக் கண்டுபிடித்துள்ளனர். மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பழ விதைகளை மீண்டும் மண்ணில் விதைத்து காடுகளாக மாற்ற முயற்சி எடுத்துள்ளதன் நல்கொண்டாவை சேர்ந்த மூன்று இளைஞர்கள் ஒட்டுமொத்த மனித சமூகத்திற்கும் முன்மாதிரியாக இருந்து வருகின்றனர்.
நகிரேகல் நகரத்தைச் சேர்ந்த பிரம்மதேவர நரேஷ், கர்ணதி நரேஷ் மற்றும் விக்ரம் ஆகிய 3 இளைஞர்கள் ‘லிட்டில் சோல்ஜர் பவுண்டேஷன்’-ஐ நிறுவி இருக்கின்றனர். வாட்ஸ்அப்பில் இவர்களின் ‘பக்ரிதி யாத்ரா’ (இயற்கை பயணம்) என்ற முயற்சி உள்ளூர்வாசிகளை மா, ஆலமரம், நாவல் பழம், வேம்பு போன்ற மரங்களின் விதைகளை அப்புறப்படுத்துவதற்கு பதிலாக சேகரிக்க ஊக்குவிக்கிறது.
மக்கள் சேகரித்து வைக்கும் இதுபோன்ற விதைகள் தரிசு மேடுகள், மலைச்சரிவுகள் மற்றும் பயன்படுத்தப்படாத நிலப்பகுதிகளில் விதைக்கப்படுகின்றன அல்லது சிதறடிக்கப்படுகின்றன. இதன் மூலம் மக்களிடம் இருந்து சேகரிக்கப்பட்ட விதைகள், முளைத்து ஒரு நாள் மரங்களாக அவை விதைக்கப்பட்ட நிலப்பரப்பையே மாற்றும் வாய்ப்பு உருவாக்கப்பட்டு வருகின்றது.
மக்கள் தாங்கள் உண்ணும் பழங்களில் இருக்கும் விதைகளை தூக்கி எறிவதற்கு பதில் எடுத்து வைத்து இந்த மூன்று இளைஞர்கள் அல்லது இவர்களின் குழுவிற்கு தகவல் சொன்னால் அவர்கள் மக்களின் வீடுகளுக்கே வந்து நேரடியாக சேகரித்து செல்கிறறார்கள் கடந்த நான்கு மாதங்களில், தெலுங்கானா மற்றும் அதையும் தாண்டி தங்கள் இந்த இயக்கத்தை விரிவுபடுத்தும் நோக்கத்துடன், ஷாலிகௌராம், கேத்தப்பள்ளி, நகிரேகல் மற்றும் நல்கொண்டா மாவட்டத்தின் பிற பகுதிகளில் ஆயிரக்கணக்கான விதைகளை இவர்கள் நட்டுள்ளனர்.
இயற்கை பேரழிவுகளை அதிகரித்து நிலைமையை மோசமாக்கி வரும் சுற்றுச்சூழல் ஏற்றத்தாழ்வை சரி செய்வதற்கான ஒரு சிறிய முயற்சி இது என்று குழு கூறுகிறது. “இயற்கை நமக்கு நிறைய கொடுத்துள்ளது – ஏராளமான சூரிய ஒளி, மழை மற்றும் இயற்கை வளங்கள். தற்போது நம் கண் முனி அழிந்து வரும் இயற்கைக்கு நாம் ஏதாவது திருப்பிக் கொடுக்க வேண்டிய நேரம் இது,” என்று விக்ரம் குறிப்பிட்டுள்ளார்.
“பசுமை சவால்” (Green Challenge) என்று அழைக்கப்படும் இவர்களின் பிரச்சாரம், உள்ளூர் மக்களின் பரவலான கவனத்தை ஈர்த்துள்ளது. வீட்டிலேயே பழ விதைகளை சேமித்து வைப்பதன் மூலமோ அல்லது வாட்ஸ்அப் மூலம் குழுவைத் தொடர்புகொள்வதன் மூலமோ யார் வேண்டுமானாலும் இந்த இயக்கத்தில் சேரலாம். மக்களிடம் இருந்து விதைகளை சேகரிக்கும் மூவரும், தூவப்படும் அல்லது விதைக்கப்படும் விதைகள் நன்கு முளைத்து மரமாக மாறு அதிக வாய்ப்புள்ள பகுதிகளில் விதைகள் விதைக்கப்படுவதை உறுதி செய்கிறார்கள். சிறிய விஷயங்களை செய்வதன் சாதாரண மக்கள் கூட இயற்கையின் பாதுகாவலர்களாக உணர இவர்கள் வழி ஏற்படுத்தி உள்ளார்கள்.
வெப்பநிலையை எதிர்த்துப் போராடும் நம் நாட்டில் ஒருபக்கம் விவசாய விளைநிலங்கள் மற்றும் காடுகள் அழிக்கப்பட்டு வரும் நிலையில், மறுபக்கம் நல்கொண்டாவைச் சேர்ந்த இந்த இளைஞர்கள், பூமி மற்றும் இயற்கையை பாதுகாக்க உயர் தொழில்நுட்பங்களை தீர்வுகளாக கருத தேவையில்லை என்பதை நிரூபித்து வருகின்றனர்.
September 13, 2025 8:01 PM IST
ஐடியா சிறிசு, ஆனால் பலனோ பெருசு…காலநிலை மாற்றத்தை எதிர்த்து இயற்கையை பாதுகாக்க போராடும் 3 இளைஞர்கள்

