Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

”கோச் கிடையாது, உபகரணங்கள் கிடையாது” 77 கி.மீ கடினமான மராத்தானில் 2 ஆம் இடம் பிடித்த பீகார் தொழிலாளி – வைரல் வீடியோ | இந்தியா

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 13, 2025
in அரசியல் செய்திகள்
0
”கோச் கிடையாது, உபகரணங்கள் கிடையாது” 77 கி.மீ கடினமான மராத்தானில் 2 ஆம் இடம் பிடித்த பீகார் தொழிலாளி – வைரல் வீடியோ | இந்தியா
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


பீகாரின் ககாரியாவைச் சேர்ந்த, 32 வயதான, தினக்கூலிக்கு வேலை பார்த்து வரும் தொழிலாளியான ரோகித் குமார் என்பவர், தனது விடாமுயற்சி மற்றும் தன்னம்பிக்கையின் மூலம் ஸ்பிட்டி மராத்தானில் இரண்டாம் இடம் பிடித்து இந்திய மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். டெல்லியில் கட்டுமான தொழிலாளராக பணிபுரியும் அவர், இந்திய இராணுவம் நடத்திய சூர்யா ஸ்பிட்டி சாலஞ்ச் 2025 இன் கடினமான 77 கி.மீ. (குன்சும் லா – காசா அல்ட்ரா) தூரம் கொண்ட உயர்நிலைப் பாதையிலான மராத்தானை 7 மணி 44 நிமிடங்களில் முடித்து, இரண்டாம் இடத்தைப் பெற்றார்.

ரோகித்தின் சாதனையை பாராட்டிய இந்திய இராணுவத்தின் உத்தர்பாரத் பிரிவு, எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த பதிவில், “பயிற்சியாளர் இல்லை. ஆடம்பரமான உபகரணங்கள் இல்லை. வெறும் உறுதியான மன உறுதி மட்டுமே கொண்டுள்ளார். அவரது இறுதிக் கோடு வெறும் பதக்கம் மட்டுமல்ல, அது கண்ணியம், நம்பிக்கை, மேலும் ஒலிம்பிக் கனவை நோக்கி அவர் எடுத்த ஒரு முக்கிய படி” எனக் குறிப்பிட்டிருக்கிறது.

இந்திய ராணுவத்தின் பதிவு: https://x.com/UBArea_IA/status/1961090724222648750

மராத்தான்களால் நிரம்பிய வாழ்க்கை

2020 முதல் ஓட்டத்தில் தீவிரமாக ஈடுபட்ட ரோகித், ஏற்கனவே 100-க்கும் மேற்பட்ட மராத்தான்களில் ஓடியுள்ளார், ஒரு மாதத்திற்கு சராசரியாக ஐந்து மராத்தான்களில் பங்கேற்றிருக்கிறார்.  டைம்ஸ் ஆஃப் இந்தியாவிடம் பேசிய அவர், “இப்போது நான் தரமான ஓட்டங்களில் கவனம் செலுத்துகிறேன். அதனால் தான் உயர்நிலை ஸ்பிட்டி மராத்தானில் பங்கேற்றேன்” என்றார்.

லண்டன், நியூயார்க், டோக்கியோ மராத்தான்களில் பங்கேற்ற ஓட்டக்காரர்களிடம் இருந்து ஈர்க்கப்பட்டு, அதிகாலை 4.30 மணிக்கே பயிற்சியைத் தொடங்குவது அவரது வழக்கமாகி இருக்கிறது. வேலை நேர இடைவெளியிலும் தனியாக பயிற்சியை மேற்கொள்கிறார்.

அருணாச்சலுக்குப் புதிய அழைப்பு

ரோகித் ஸ்பிட்டி மராத்தானில் நிகழ்த்திய சாதனைக்குப் பிறது, அவர் அருணாச்சலப் பிரதேசம், தவாங்கில் நடைபெறும் மற்றொரு உயர் நிலை மராத்தானில் பங்கேற்கவும் அழைக்கப்பட்டுள்ளார். “எனது பயணம், உணவு, தங்குமிடச் செலவுகளை இந்திய இராணுவம் ஏற்றுக்கொள்ளும் என உறுதியளித்துள்ளதாகவும் அவர் கூறினார். அங்கு இன்னொரு வெற்றியையும் தான் எதிர்பார்க்கிறேன்” என்று அவர் உற்சாகமாகக் கூறினார்.

ஒலிம்பிக் கனவு

2028-இல் லாஸ் ஏஞ்சல்ஸ் நடைபெறவிருக்கும் ஒலிம்பிக்கில், டிரையத்லானில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும் என்பதே ரோகித்தின் மிகப்பெரிய கனவு. “எனது மாத வருமானம் சுமார் ரூ.30,000. அதில் ரூ.20,000-ஐ உணவுக்கும், உடற்பயிற்சி உபகரணங்களுக்கும் செலவழிக்கிறேன். இந்தக் கனவை நனவாக்க வேண்டும் என்பதற்காகவே தான் எல்லா தியாகங்களையும் செய்கிறேன்” என்று அவர் கூறினார்.

முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

September 13, 2025 7:48 PM IST

தமிழ் செய்திகள்/இந்தியா/

”கோச் கிடையாது, உபகரணங்கள் கிடையாது” 77 கி.மீ கடினமான மராத்தானில் 2 ஆம் இடம் பிடித்த பீகார் தொழிலாளி – வைரல் வீடியோ



.

Previous Post

ஆசிய கோப்பை: வங்கதேசத்துக்கு எதிராக இலங்கை பந்துவீச்சு!

Next Post

பார்வையிழந்த மனைவிக்கு வாழ்நாள் சத்தியம்! அன்புக் கணவருக்கு குவியும் பாராட்டுகள்!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
பார்வையிழந்த மனைவிக்கு வாழ்நாள் சத்தியம்! அன்புக் கணவருக்கு குவியும் பாராட்டுகள்!

பார்வையிழந்த மனைவிக்கு வாழ்நாள் சத்தியம்! அன்புக் கணவருக்கு குவியும் பாராட்டுகள்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In