மணிப்பூரின் சுராசந்த்பூரில் உள்ள மைதானத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், ரூ.7500 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
அதன் பின்னர் அந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது, “மணிப்பூர் மக்களுக்கு வணக்கம் சொல்லிக் கொள்கிறேன். மணிப்பூர் என்ற பெயரிலேயே ரத்தினம் உள்ளது. இது வரும் காலங்களில் வடகிழக்கில் பொலிவை ஏற்படுத்தும்.
தைரியம் மற்றும் துணிச்சலுக்கு பெயர் பெற்ற இடம் தான் மணிப்பூர். மணிப்பூரின் அமைதிக்காக பாடுபடுவேன், இது என் வாக்குறுதி.
