Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

பட்டாசு வெடிக்க நாடு முழுவதும் தடை… உச்சநீதிமன்ற நீதிபதி முன்வைத்த கேள்வி | இந்தியா

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 13, 2025
in அரசியல் செய்திகள்
0
பட்டாசு வெடிக்க நாடு முழுவதும் தடை… உச்சநீதிமன்ற நீதிபதி முன்வைத்த கேள்வி | இந்தியா
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:September 13, 2025 8:01 AM IST

உச்சநீதிமன்றம், டெல்லி உள்ளிட்ட பகுதிகளில் பட்டாசு தடை குறித்து நாடு முழுவதும் ஏன் தடை விதிக்கக்கூடாது என கேள்வி எழுப்பி, மத்திய அரசுக்கு அறிக்கை கோரியது.

பட்டாசுபட்டாசு
பட்டாசு

பட்டாசு வெடிக்க நாடு முழுவதும் ஏன் தடை விதிக்கக்கூடாது என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

காற்று மாசு காரணமாக டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வு விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிமன்ற சட்ட ஆலோசகரான மூத்த வழக்கறிஞர் பரமேஷ்வர், டெல்லியில் பட்டாசு வெடிக்க முழு தடை விதிப்பது ஏராளமானவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் என்று கூறினார்.

இதனைக் கேட்ட நீதிபதிகள், தலைநகரில் உள்ள மக்கள் மட்டும் நல்ல காற்றைப் பெறும் உரிமையைப் பெற்று இருந்தால், மற்ற நகரங்களில் வசிக்கும் மக்களுக்கு ஏன் அந்த உரிமை இல்லை என்று வினவினர்.

கடந்த குளிர்காலத்தில், தான் அமிர்தசரஸில் வசித்ததாகக் கூறிய தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், டெல்லியை விட அங்கு காற்று மாசு மோசமாக இருந்ததாகக் குறிப்பிட்டார். பட்டாசுகளை தடை செய்ய வேண்டும் என்றால், நாடு முழுவதும் தடை செய்ய வேண்டும் என்று நீதிபதி தெரிவித்தார்.

இது தொடர்பாக, காற்று தர மேலாண்மை ஆணையத்திடம் இருந்து விரிவான அறிக்கையைப் பெற மத்திய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

September 13, 2025 8:01 AM IST



.

Previous Post

யுபிஐ பணப்பரிவர்த்தனை செயல்படுவது எப்படி? UPI money transfer

Next Post

நேபாள சாலைகளில் ஜென் ஸி இளைஞர்கள்! இந்த முறை போராட அல்ல.. சுத்தப்படுத்த!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
நேபாள சாலைகளில் ஜென் ஸி இளைஞர்கள்! இந்த முறை போராட அல்ல.. சுத்தப்படுத்த!

நேபாள சாலைகளில் ஜென் ஸி இளைஞர்கள்! இந்த முறை போராட அல்ல.. சுத்தப்படுத்த!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In