என்பிசிஐ எனப்படும் இந்திய தேசிய கொடுப்பனவு கழகமானது, கடந்த 2016ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 வங்கிகளை இணைத்து இந்த முக்கியத்துவம் வாய்ந்த திட்டத்தைத் தொடங்கியது. அப்போது ஆர்பிஐ ஆளுநராக இருந்த டாக்டர் ரகுராம் ராஜன், மும்பையில் திட்டத்தைத் தொடங்கி வைத்தார். அதன்பிறகு, வங்கிகள் தங்களது யுபிஐ முகவரிகள கொண்ட செயலிகளை கூகுள் பிளேவில் பதிவேற்றம் செய்தன.
இது முக்கியத்துவம் பெறுவது எப்படி?
365 நாள்களும் 24×7 என எந்த நேரமும், நாட்டின் எந்த மூலையில் இருக்கும் வங்கிக் கணக்கிலிருந்தும் மற்றொரு வங்கிக்குப் பணம் அனுப்பலாம். பெறலாம்.
பல வகையான வங்கிகள் மற்றும் வங்கிக் கணக்குகளை பராமரிக்க ஒரே ஒரு செல்போன் செயலி.
ஒரே கிளிக், அடையாளத்தை உறுதி செய்யும் இரண்டு பாஸ்வேர்டுகள் – பணப்பரிமாற்றம் உறுதி செய்யப்படுகிறது.
வங்கிக் கணக்கு அட்டை எண், வங்கிக் கணக்கு எண், ஐஎஃப்எஸ்சி கோடு என எதுவும் இல்லாமலேயே, வெறும் செல்போன் எண் மூலமாகவே பணப்பரிமாற்றம் செய்யலாம்.
க்யூஆர் கோடு மூலமாகவும் பணப்பரிமாற்றம் செய்ய முடியும்.
கையில் எப்போதும் பணம் வைத்திருக்க வேண்டும் என்ற நிலை இல்லை.
ஏடிஎம்-களுக்குச் சென்று வரிசையில் நிற்க வேண்டாம்.
முன்னெச்சரிக்கையாக தேவையான அளவை விட அதிகப் பணத்தை எடுக்கும் நிலை தவிர்ப்பு.
மின் கட்டணம் போன்ற கட்டணங்களை செலுத்த, நிதி வழங்குதல், நிதி வசூல் என அனைத்தும் ஒரு நொடியில் ஒரு செயலியில்.
செல்போன் செயலியிலிருந்தே புகார்களை பதிவு செய்யலாம்.
எவ்வாறு பதிவு செய்வது?
சேவை தேவைப்படுவோர் தங்களது செல்போனிலிருந்து வங்கியின் இணையதளத்திலிருந்து அல்லது ஆப் ஸ்டோர்களிலிருந்து செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.
பயனாளர் தனது பெயர், முகவரி ஐடி, பாஸ்வேர்டு கொடுத்து உள்நுழைய வேண்டும்.
பிறகு, ஆட் என்ற ஆப்ஷனில் சென்று லிங்க் / மேனேஜ் வங்கிக் கணக்கு என்பதை கிளிக் செய்து ஒருவரது வங்கிக் கணக்கு விவரங்களைப் பதிவு செய்து செயலியில் வங்கிக் கணக்கை இணைத்துக் கொள்ள வேண்டும்.
