Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் பதவி ஏற்பு எப்போது? வெளியான முக்கிய அறிவிப்பு | இந்தியா

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 11, 2025
in அரசியல் செய்திகள்
0
குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் பதவி ஏற்பு எப்போது? வெளியான முக்கிய அறிவிப்பு | இந்தியா
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:September 11, 2025 8:08 PM IST

சி.பி. ராதாகிருஷ்ணன் 15வது குடியரசுத் துணைத் தலைவராக எப்போது பதவி ஏற்கிறார் எனும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சிபி ராதாகிருஷ்ணன் சிபி ராதாகிருஷ்ணன்
சிபி ராதாகிருஷ்ணன்

15வது குடியரசுத் துணைத் தலைவராகத் தேர்வாகியுள்ள சி.பி. ராதாகிருஷ்ணனின் பதவி ஏற்பு குறித்தான தகவல் வெளியாகியுள்ளது.

குடியரசுத் துணைத் தலைவராக இருந்த ஜெகதீப் தன்கர் கடந்த ஜூலை மாதம் 21 ஆம் தேதி பதவி விலகியதைத் தொடர்ந்து மீண்டும் தேர்தல் அறிவிக்கப்பட்டது. தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் மகாராஷ்டிர ஆளுநரான, தமிழ்நாட்டைச் சேர்ந்த சி.பி. ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டார். அவரை எதிர்த்து இந்தியா கூட்டணி சார்பில் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டி களமிறக்கப்பட்டார்.

மொத்தம் 781 வாக்குகள் உள்ள நிலையில், பிஜு ஜனதாதளம், பி.ஆர்.எஸ்., அகாலி தள் உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்தன. 2 சுயேச்சை எம்.பி.க்களும் புறக்கணித்தனர். 767 எம்.பி.க்கள் வாக்களித்த நிலையில் 752 வாக்குகள் மட்டுமே செல்லத்தக்கவை. 15 வாக்குகள் செல்லாதவை என அறிவிக்கப்பட்டது.

பெரும்பான்மைக்கு 385 வாக்குகள் தேவையான நிலையில் சி.பி. ராதாகிருஷ்ணன் 452 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். இந்தியா கூட்டணி வேட்பாளர் சுதர்சன் ரெட்டி 300 வாக்குகளைப் பெற்றார்.

இதனையடுத்து சி.பி. ராதாகிருஷ்ணன் இந்தியாவின் 15வது குடியரசுத் துணைத் தலைவராகத் தேர்வானார். இதனையடுத்து அவர் வகித்து வந்த மகாராஷ்டிரா ஆளுநர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார். இதனையடுத்து குஜராத் ஆளுநர் ஆச்சார்யா தேவ்ரத் மகாராஷ்டிரா கூடுதல் ஆளுநராகச் செயல்படுவார் என குடியரசு மாளிகை தெரிவித்துள்ளது.

இந்நிலையில், புதிதாகத் தேர்வாகியுள்ள குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் நாளை (12ஆம் தேதி) காலை பதவி ஏற்கிறார் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நாளை காலை குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறும் பதவி ஏற்பு நிகழ்ச்சியில், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, நாட்டின் 15வது குடியரசுத் துணைத் தலைவராக சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு பதவி பிரமாணம் செய்துவைக்கிறார்.

முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

September 11, 2025 8:08 PM IST



.

Previous Post

பஞ்சாபில் பலி எண்ணிக்கை 78 ஆக அதிகரிப்பு!

Next Post

பரமக்குடி: இமானுவேல் சேகரன் நினைவு தினம்; அதிமுக-வினரை அழைக்க மறுத்ததால் சலசலப்பு!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
பரமக்குடி: இமானுவேல் சேகரன் நினைவு தினம்; அதிமுக-வினரை அழைக்க மறுத்ததால் சலசலப்பு!

பரமக்குடி: இமானுவேல் சேகரன் நினைவு தினம்; அதிமுக-வினரை அழைக்க மறுத்ததால் சலசலப்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In