டெல்லி சாணக்கியபுரியில் அமைந்துள்ள தமிழ்நாடு இல்லம், வெறும் தங்குமிடம் மட்டுமல்ல, அது தமிழர்களின் கலை, பண்பாடு, மற்றும் அறிவைப் பரப்புவதற்கான இடமாகவும் செயல்படுகிறது. இங்குள்ள “ஹவுஸ் ஆஃப் தமிழ் கல்ச்சர்’ மற்றும் அதன் நூலகம், தமிழ் மொழி வளர்ச்சிக்கும், புதிய தலைமுறையினருக்கு நமது பாரம்பரியத்தை அறிமுகப்படுத்தவும் எப்படிப் பெரிதும் உதவுகின்றன என்பதை, அதன் பொறுப்பாளர் சங்கீதா பேட்டியிலிருந்து அறிவோம்.
‘ஹவுஸ் ஆஃப் தமிழ் கல்ச்சர்’: ஒரு குடையின்கீழ் பல கலைகள்
தமிழ்நாடு இல்லத்தில் உள்ள ‘ஹவுஸ் ஆஃப் தமிழ் கல்ச்சர்’ பிரிவு, பரதநாட்டியம், தமிழ் மொழி கற்றல், நடனம், ஓவியம் மற்றும் வாய்ப்பாட்டு வகுப்புகள் எனப் பல்வேறு கலைகளை ஒரே இடத்தில் கற்றுக்கொடுக்கிறது. தமிழ் தெரியாதவர்கள் கூட ஆர்வத்துடன் தமிழ் மொழியைக் கற்றுக்கொள்வதற்காக, தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்துடன் இணைந்து இங்குப் படிப்புகள் நடத்தப்படுகின்றன.
இந்த வகுப்புகளுக்கான பாடத்திட்டம் மற்றும் ஆசிரியர்களை தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகமே தேர்வு செய்து அனுப்புகிறது. டெல்லியில் வசிக்கும் யார் வேண்டுமானாலும் இந்த வகுப்புகளில் சேரலாம் என்பது ஒரு சிறப்பம்சம். இதற்கான அட்மிஷன், வெளியீடுகள், சமூக ஊடகங்கள் மற்றும் தமிழ்நாடு இல்லத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் (tnhouse.tn.gov.in) மூலம் விளம்பரப்படுத்தப்படுகின்றன
