முன்னதாக பொள்ளாச்சி தனியார் ஹோட்டலில் விவசாயிகள், தொழில் அமைப்பினருடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் கள் இறக்குவது தொடர்பாக பேசிக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில் ஒரு விவசாயி,

“நீங்கள் ஆட்சியில் இருந்தபோது ஏன் கள் இறக்க அனுமதி கொடுக்கவில்லை” என்று எடப்பாடி பழனிசாமியிடம் கேள்வி எழுப்பினார். அங்கிருந்து அதிமுக நிர்வாகிகள், பௌன்சர்கள், பொள்ளாச்சி ஜெயராமன், வேலுமணி ஆகியோர் விவசாயியை சமாதானம் செய்ய முயற்சித்தனர்.
